25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


மல்யுத்த ரேங்கிங் பெண்களுக்கான பிரீஸ்டைல் தொடரில் தங்கம் வென்ற அன்டிம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மல்யுத்த ரேங்கிங் பெண்களுக்கான பிரீஸ்டைல் தொடரில் தங்கம் வென்ற அன்டிம்

மல்யுத்த ரேங்கிங் தொடர் மங்கோலியாவில் நடக்கிறது. பெண்களுக்கான பிரீஸ்டைல் போட்டி நடந்தன. இந்தியாவின் அன்டிம் (53 கிலோ), பைனலில் ரஷ்யாவின் நடாலியாவை 10-0 என வீழ்த்தி தங்கம் கைப்பற்றினார். 

57 கிலோ பிரிவு பைன லில் இந்தியாவின் நேஹா, 4-0 என மங்கோலியாவின் போலூர்டுயாவை வென்று, தங்கம் வசப்படுத்தினார்.மற்ற இந்திய வீரா ங் க னைகள் ஹர்ஷித்தா (72). முஸ்கான் (59) தங்களது பிரிவில் பங்கேற்ற போட்டியிலும் வென்று, தங்கம் தட்டிச் சென்றனர். 50 கிலோ போட்டியில் நீலம் வெண்கலம் வென்றார்.

ஆண்களுக்கான கிரிகோ போட்டிகள் ரவுண்டு ராபின்' முறையில் நடந்தன. 55 கிலோ பிரிவில் 4 போட்டியில் இந்தியாவின் அனில் மோர், தங்கம் கைப்பற்றினார். மற்ற இந்திய வீரர் கள் நிஷாந்த் (77), கரண் கம்போஜ் (87), நீரஜ் (67) வெண்கலப் பதக்கம் கைப் பற்றினர். நேற்று நடந்த 7 பிரிவுகளில் இந்தியாவுக்கு 6 பதக்கம்( 1 தங்கம், 2வெள்ளி, 3 வெண்கலம்) கிடைத்தன.

இதுவரை இந்தியா 5 தங்கம், 2 வெள்ளி,4 வெண்கலம் என மொத்தம் 2 பதக்கம் கைப்பற்றியுள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News