பசியின்மையைச் சரிசெய்யும் சுக்கு.
மழைக்காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் இவை தீவிரமாகாமல் தடுக்கவும், அறிகுறியை கட்டுப்படுத்தவும் பாரம்பரியமாகவே சில மூலிகைகள் உள்ளது. சுக்கு மழைக்காலத்தில் கண்டிப்பாக எடுக்க வேண்டிய மூலிகை என்று சொல்லலாம்.
இஞ்சியை, சுண்ணாம்பு நீரில் நனைத்துக் காயவைத்து எடுக்கப்படுவதுதான் சுக்கு. இது, காரத்தன்மை கொண்டது.சுக்கு, பித்தத்தை அதிகரிக்கும். கபம், வாதம் போன்றவற்றைக் குறைக்கும்.
பசியின்மையைச் சரிசெய்யும். உடல்பருமன் இருப்பவர்களுக்கு ஏற்றது. கெட்ட நீரை அகற்றும்.தனியா, சுக்கு, சீரகம், மிளகு போன்றவற்றைச் சேர்த்து அரைத்து, ஒரு தேக்கரண்டி அளவு பாலில் கலந்து, சுக்கு காபியாகக் குடிக்கலாம்.
சுக்கு ரத்தத்தைக் கெட்டிப்படுத்தும். எனவே, ரத்தம் உ றைதல் பிரச்னை இருப்பவர்கள், அளவாகப் பயன்படுத்த வேண்டும்.செரிமானம் பிரச்னை உள்ளவர்கள்அரை தேக்கரண்டி சுக்குப் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க நிவாரணம் கிடைக்கும்.
0
Leave a Reply