தென் கொரியா, சீனாவை ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கியில், வென்றது.
ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி 14வது சீசன் சென்னை, மதுரையில், நேற்று, மதுரையில் உள்ள ரேஸ் கோர்ஸ் சர்வதேச ஹாக்கி மைதானத்தில் நடந்த 19-20 வது இடத்துக்கான போட்டியில் சீனா, தென் கொரியா அணிகள் மோதின.
தென் கொரிய அணி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 19வது இடம் பிடித்தது. சீனாவுக்கு 20வது இடம் கிடைத்தது,
நேற்றுடன் மதுரையில் ஜூனியர் உலகக் கோப்பை தொடருக்கான போட்டிகள் நிறைவு பெற்றன. பைனல் (டிச. 10), இந்தியா-அர்ஜென்டினா மோதும் மூன்றாவது இடம் (டிச. 10) உட்பட மற்ற போட்டிகள் சென்னையில் நடக்கவுள்ளன. . நாளை நடக்கவுள்ள 3-4வது இடத்துக்கான போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி னால் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைக்கும்.
0
Leave a Reply