மழைநீரில் மூழ்கிய பருத்திச்செடிகள் ,ராஜபாளையம் பகுதிகளில் நிவாரணம்வழங்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர் .
.கார்த்திகை மாதம் தொடங்கியது முதல், ராஜபாளையம் பகுதிகளில் தொடர்ச்சியாக கன மழை பெய்ததால், உயரமாக உள்ள நிலத்தில் இருந்த தண்ணீர் முழுவதும் தாழ்வாக இருந்த நிலத்தில் தேங்கி, பயிர்கள் 30 நாட்கள் வளர்ச்சி அடைந்தநிலையில் மழைநீரில் பருத்தி செடிகள் மூழ்கின.தண்ணீர் செல்லவழி இல்லாத காரணத்தால் 30 நாட்களுக்கு பிறகும் பருத்தி செடிகள் வளர்ச்சி முற்றிலுமாக அழுகும் அபாயநிலையில் உள்ளது
ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 முதல் ரூ.35 ஆயிரம் வரை செலவழித்து மகசூல் பெற முடியாதநிலை உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட வயல்களில் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர் .
0
Leave a Reply