விளையாட்டு போட்டிகள் .DECEMBER 9 th
முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் (கே.எஸ். சி.ஏ.,) புதிய தலைவராக தேர்வானார்.
உலக கோப்பை பைனல் துப்பாக்கி சுடுதல் தொடர் தலைநகர் தோகாவில் 'டிராப்' பிரிவு பைனலில், இந்தியாவின் ஜோராவர் சிங் சாந்து (7 புள்ளி) 7வது இடம் பிடித்தார். இந்தியாவுக்கு 2 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என, 6 பதக்கம் கிடைத்தது.
பெண்களுக்கான தெற்காசிய கிளப் கால்பந்து சாம்பியன்ஷிப் லீக் போட்டி, நேபாளதலைநகர் காத்மண்டுவில் ,இந்தியாவின் ஈஸ்ட் பெங்கால் அணி 4-0 என, பூடானின் டிரான்ஸ்போர்ட் யுனைடெட் அணியை வென்றது.
கட்டாக்கில் இன்று நடக்கும் முதல் 'டி-20' போட்டியில் இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதுகின்றன. இந்திய பிக்கிள்பால் லீக் தொடருக்கான பைனல் டில்லியில், மும்பை அணி 5-1 என்ற கணக்கில் ஐதராபாத் அணியை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
5 போட்டிகள் கொண்ட தொடர் டி-20, தொடரில் இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி பங்கேற்கிறது. முதல், போட்டி இன்று ஒடிசாவின் கட்டாக்கில் உள்ள பாராபதி மைதானத்தில் நடக்க உள்ளது. இரு அணிகளும் 31 சர்வதேச 'டி-20' போட்டியில் மோதின. இந்தியா 18, தென் ஆப்ரிக்கா 12ல் வென்றன..
0
Leave a Reply