April 23rdவிளையாட்டு போட்டிகள்
தடகள போட்டி
28வது தேசிய பெடரேஷன் சீனியர் தடகளபோட்டி கேரள மாநிலம் கொச்சியில், பெண்களுக்கான 400மீ., தடை தாண்டும் ஓட்டத்தின் பைனலில், இலக்கை 56.04 வினாடியில் கடந்த தமிழகத்தின் வித்யா ராம் ராஜ், முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை பெற்றார்.
ஆசிய சாம்பி யன்ஷிப் 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்திற்கான ஃ தகுதி இலக்கை(57.80வினாடி) விட வேகமாக வந்த வித்யா, இத்தொ டரில் தனது 2வது பதக்கத்தை வென்றார்.
குத்துசண்டை
15, 17, வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் ஜோர்டானில். நேற்று,15 வயதுக்குட்பட்டோருக்கான காலிறுதி நடந்தன. ஆண்களுக்கான 46 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ருத்ராக்ஷ், கிர்கிஸ்தானின் ஐதர்முசேவ் மோதினர். ருத்ராக்ஷ் 3-0 என்றகணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறினர்.
ஆண்களுக்கான 37 கிலோ பிரிவு காலிறு தியில் இந்தியாவின் ஹர்சில் 5,0 என, துர்க் மெனிஸ்தானின் செர்டரோவை தோற்கடித்தார். ஆண்களுக்கான 49 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சஞ்சித் ஜயனி5-0 எனசீனதைபேயின் சென்-என்யுவை வென்றார். மற்றஎடைப்பிரிவு காலிறுதியில் இந்தியா வின் சன்ஸ்கர் வினோத் அத்ரம் (35கிலோ), பிரிக் ஷித் பலஹ்ரா(40 கிலோ)வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தனர்.பெண்களுக்கான 43 கிலோ பிரிவு காலிறுதி யில் இந்தியாவின் மில்கி மெய்னம் 5-0 என கஜகஸ் தானின் அப்திகானியை வென்றார்.
மல்யுத்தம்
(20 வயதுக்குட்பட்டோருக்கான) ராஜஸ்தானில் தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' 76 கிலோ பிரிவில் பிரியா மாலிக் களமிறங்கினார். 20 வயதுஉலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் கைப்பற்றிய பிரியா, மீண்டும் தேசிய சாம்பியன் ஆனார்.17 வயதுபிரிவு உலக சாம்பியன்ஷிப்பில் ஹர்சித்தா(72கிலோ), சுராஜ்(60கிலோ,கிரிகோ ரோமன்) தங்கம்வென்றனர்.. 62 கிலோபிரிவில்,'உலக' தொடரில் வெள்ளி வென்ற நிகிதா, இம்முறை வெண்கலம் தான் வெல்ல முடிந்தது. மஹாராஷ்டிராவின் பிரகதி தங்கம் வென்றார். தவிர, ஜஸ்பூரன் சிங்(125கிலோ), ரீனா(55),சங்வான்(57)உள்ளிட்டோர் தங்கள் பிரிவுகளில் தங்கம் வசப்படுத்தினார்.ஒட்டுமொத்தமாக பிரீஸ்டைல், கிரிகோ ரோமன் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் சிறப்பாக செயல் பட்டஹரியானா ஒட்டுமொத்த சாம்பியன் ஆனது. டில்லி அணி இரண்டாவது இடம் பிடித்தது.
செஸ்
('பிடே') சார்பில் சர்வதேச செஸ் கூட்ட மைப்பு பெண்களுக்கான 'கிராண்ட் ப்ரி' தொடர் 5ம் கட்ட போட்டிகள் புனேயில் நடந்தது. இந்தியாவின் ஹம்பி, திவ்யா தேஷ்முக்,வைஷாலி, ஹரிகா துரோணவள்ளி உட்பட 10 பேர் பங்கேற்றனர். நேற்று கடைசி, 9வது சுற்று போட்டி நடந்தன. முடிவில் இத்தொடரில் ஒருபோட்டியில் கூட தோற்காத ஹம்பி,7.0 புள் ளியுடன் முதலிடம் பிடித்து, சாம்பியன் ஆனார். இவருக்கு ரூ.17.50 லட்சம் பரிசு கிடைத்தது. ஜு ஜினெர் (7.0 புள்ளி, 1 தோல்வி, ரூ. 12.60 லட்சம்) இரண்டா வது, திவ்யா (5.5, ரூ.10.20 லட்சம்) மூன்றாவது இடம்பெற்றனர்.
0
Leave a Reply