ஆசிய கோப்பை கால்பந்து தொடர் முடிவில் போட்டி கோல் எதுவுமின்றி டிரா ஆனது.
ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2027ல் சவுதி அரேபியாவில் மூன்றாவது கட்ட தகுதிச்சுற்று நேற்றுதுவங்கியது. 24 அணிகள், ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடக்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோதும்.புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் அணி, ஆசியகோப்பை தொடருக்கு தகுதி பெறும்.
உலகத் தரவரிசையில் 126 வது இடத்திலுள்ள இந்திய அணி 'சி' பிரிவில் ஹாங்காங், சிங்கப்பூர், வங்கதேசம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. நேற்று ஷில்லாங்கில் (மேகாலயா) நடந்த முதல் போட்டியில், 185 வது இடத்திலுள்ள வங்கதேசத்தை எதிர்கொண்டது. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமனில் முடித்தது. இரண்டாவது பாதி முடிவில் போட்டி கோல் எதுவுமின்றி டிரா ஆனது.
0
Leave a Reply