இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும், எடுத்துரைக்கும் விதமாக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி
விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் (28.01.2025) போக்குவரத்துத்துறை சார்பில், 36-வது சாலை பாதுகாப்பு மாதம் -2025 (01.01.2025 முதல் 31.01.2025 வரை) முன்னிட்டு, இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும், எடுத்துரைக்கும் விதமாக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும், சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும், இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலைக்கவசம் வழங்கி, தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இப்பேரணியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் காவலர்கள், போக்குவரத்து துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.
இப்பேரணி மூலம் தலைக்கவசம் அணிவதன் பயன்கள், வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசக்கூடாது, அளவுக்கு அதிகமான பாரம் ஏற்றிக்கொண்டு இருசக்கர வாகனங்களில் பயணிக்க கூடாது, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனங்களை இயக்கக் கூடாது, இரண்டு பேரை தவிர அதிகமான நபர்களை இருசக்கர வாகனங்களில் அழைத்துச் செல்லக்கூடாது, நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி விருதுநகர் பழைய பேருந்து நிலையம் வரை சென்று நிறைவடைந்தது.இந்நிகழ்ச்சியில் விருதுநகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு.இளங்கோ உட்பட மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply