25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


வரம் தரும் வள்ளல் சிந்தாமணி விநாயகர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வரம் தரும் வள்ளல் சிந்தாமணி விநாயகர்.

கேட்டதை எல்லாம் அள்ளித் தரும் வள்ளல் தான் சிந்தாமணி விநாயகர். இவர் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கேதார் காட் பகுதியில் கோயில் கொண்டிருக்கிறார்.

சிந்தாமணி என்ற தெய்வீக ரத்தினம் கபில முனிவரிடம் இருந்தது. கணர் என்னும் மன்னர் எப்படியாவது அதை தனக்கு சொந்தமாக்க வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் அது நடக்கவில்லை. ஒரு கட்டத்தில் முனிவரிடம் இருந்து திருடினார். விநாயகரின் திருவடியில் சரணடைந்தார் கபில முனிவர். தன் பக்தனுக்கு அருள்புரிய மாறுவேடத்தில் வந்த விநாயகர் சாதுர்யமாக பேசி ரத்தினத்தை வாங்கி கபிலரிடம் கொடுத்தார். மகிழ்ச்சியில் திளைத்த கபிலர் அதை விநாயகருக்கே காணிக்கையாக கொடுத்தார். இதனால் 'சிந்தாமணி வினய்' எனப் பெயர் பெற்றார்.

சுயம்புவான விநாயகர் எட்டுக்கைகளுடன் தெற்கு நோக்கி காட்சி தருகிறார். சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து வழிபட்டால் விரும்பிய வரங்கள் கிடைக்கும். முயற்சியில் ஏற்பட்ட தடைகள் விலகும். இதனால் இவர் 'விக்ன ஹர்த்தா' (தடைகளை நீக்குபவர்), 'சங்கத் மோச்சன்' (தொல்லைகளை நீக்குபவர்) என்றும் அழைக்கப்படுகிறார். கேது தோஷத்தால் சிரமப்படுபவர்கள் கேது சாந்தி பூஜை செய்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News