ப்ரோக்கோலி குருமா
. தேவையான பொருட்கள்: ப்ரோக்கோலி – 2, தக்காளி – 1, வெங்காயம் - 1சீரகம் - ¼ ஸ்பூன் , சோம்பு - ½ ஸ்பூன் , எண்ணெய் -1 ஸ்பூன், தேங்காய் - ¼ கப்பொட்டுக்கடலை - 3 ஸ்பூன், வரமிளகாய் - 2
செய்முறை:
முதலில் ப்ரோக்கோலியை நன்கு கழுவி மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வெந்நீரில் ஊற வைக்க வேண்டும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ப்ரோக்கோலி சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அதே வானலியை அடுப்பில் வைத்து மீண்டும் எண்ணெய் ஊற்றி சூடானதும் வரமிளகாய், சோம்பு, சீரகம், பொட்டுக்கடலை துருவிய தேங்காய் போன்றவற்றை சேர்த்து வறுக்க வேண்டும். இந்த கலவை சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு மீண்டும் வானலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை, பெருங்காயத்தூள், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் வெங்காயம், தக்காளியை போட்டு மென்மையாகும் வரை வதக்கவும்.
தக்காளி வெங்காயம் வதங்கியதும் அதில் அரைத்த விழுது, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். இறுதியாக அதில் பச்சை வாடை போனதும், ப்ரோக்கோலியை சேர்த்து10 நிமிடம் வரை கொதிக்க வைத்து இறக்கினால் சூடான சுவையான ப்ரோகோலி குருமா ரெடி. இந்த ப்ரோக்கோலி குருமாவை இட்லி, சப்பாத்தி, தோசை போன்றவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும். மேலும் இதில் ஏராளமான சத்துக்களும் நிறைந்துள்ளது.
0
Leave a Reply