25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


BSNL ரீசார்ஜ்.. ரூ.397 போதும்.. 150 நாட்கள் வேலிடிட்டி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

BSNL ரீசார்ஜ்.. ரூ.397 போதும்.. 150 நாட்கள் வேலிடிட்டி

`.ஜியோ நிறுவனத்தை விட கம்மி விலையில் அதிக நன்மைகளைத் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவனம் கம்மி விலையில் அதிக நாள் வேலிடிட்டி மற்றும் எக்கச்சக்க நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்.பிஎஸ்என்எல் ரூ 397 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 397 plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 10 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. குறிப்பாக 150 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். ஆனால் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டாஇ வரம்பற்ற அழைப்புகள், மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் முதல் 30 நாட்களுக்கு வழங்கப்படும்.பிஎஸ்என்எல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 666 plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக 105 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா லிமிட் முடிந்த பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. பின்பு டியூன்ஸ், ஜிங்க் மியூசிக் மற்றும் ஆஸ்ட்ரோடெல் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அட்டகாசமான பிஎஸ்என்எல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தில் அதிக நன்மைகள் கிடைப்பதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். பிஎஸ்என்எல் ரூ.797 ப்ரீபெய்ட் திட்டம் ( bsnl rs 797 plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக 300 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா லிமிட் முடிந்த பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், எஸ்எம்எஸ் நன்மைகள் இதில் கிடைக்கும். ஆனால் பிஎஸ்என்எல் ரூ.797 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படும் டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், எஸ்எம்எஸ் போன்ற நன்மைகள் முதல் 60 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதன் பின்பு, ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) மட்டுமே 300 நாட்களுக்கு ஆக்டிவாக இருக்கும். குறிப்பாக 60 நாட்களுக்குப் பிறகு அனைத்து சலுகைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும்.

பிஎஸ்என்எல் ரூ 997 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 997 plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் 160 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்துவிட்டால் 40 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 4ஜி சேவையைக் கொண்டுவருவதால், இந்நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களைத் தான் மக்கள் அதிகம் தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News