25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


இந்தியாவின் இனியன் செஸ் விளையாட்டு போட்டியில் சாம்பியன்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவின் இனியன் செஸ் விளையாட்டு போட்டியில் சாம்பியன்

பிரான்சில், கேன்ஸ் சர்வதேச ஓபன் செஸ் 38வது சீசன் நடந்தது. இதில் 25 நாடுகளை சேர்ந்த, 6 கிராண்ட்மாஸ்டர்ஸ், 21 சர்வதேச மாஸ்டர்ஸ் உட்பட 147 பேர் பங்கேற்றனர். இதன் 9வது, கடைசி சுற்றில் இந்தியாவின் இனியன், பிரனேஷ் மோதினர். கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய இனியன், 61வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.

இந்தியாவின் ஆராத்யா கார்க், பிரான்சின் பியர் பார்போட் மோதிய 9வது சுற்றுப் போட்டி 52வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.ஒன்பது சுற்றுகளின் முடிவில் 6 வெற்றி, 3 'டிரா' என, 7.5 புள்ளிகளுடன் இனியன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்தியாவின் ஆராத்யா கார்க், நடப்பு ஜூனியர் உலக சாம்பியன் கஜகஸ்தானின் காசிபெக் நோடர்பெக் தலா 7.0 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். பின், ‘டை பிரேக்கரில்' ஆராத்யா 2வது, நோடர்பெக் 3வது இடம் பிடித்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News