25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


தூய்மை தமிழ்நாடு நிறுவனம் சார்பில் கழிவு சேகரிப்பு இயக்கம் 2.0 மூலம் அரசு அலுவலகங்கள் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கான தூய்மை உறுதிமொழி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தூய்மை தமிழ்நாடு நிறுவனம் சார்பில் கழிவு சேகரிப்பு இயக்கம் 2.0 மூலம் அரசு அலுவலகங்கள் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கான தூய்மை உறுதிமொழி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (19.09.2025) தூய்மை தமிழ்நாடு நிறுவனம் சார்பில் கழிவு சேகரிப்பு இயக்கம் 2.0 மூலம் அரசு அலுவலகங்கள் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கான தூய்மை உறுதிமொழியினை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,.  அவர்கள் தலைமையில் அனைத்து அரசு அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அதன்படி,
சுத்தமே சுகாதாரம் என்பதை என் வாழ்வியல் வழிமுறையாய் கடைபிடிப்பேன்.
தூய்மை மற்றும் சுகாதாரத்துடன் கூடிய வளர்ச்சியே எனது இலட்சியம்.
எனது அலுவலகத்தையும் அதன் சுற்றுப்புறத்தையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்வேன்.
அலுவலகத்தில் காகிதங்களின் பயன்பாட்டினை குறைப்பதற்கான தொடர் முயற்சிகளை மேற்கொள்வேன்.
உணவருந்தும் இடம், கழிப்பறை ஆகியவற்றை முறையாக பயன்படுத்துவதோடு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க ஒத்துழைப்பு நல்குவேன்.
மீதமான உணவுப்பொருட்களை தனியாக சேகரித்து உரிய முறையில் அப்புறப்படுத்துவேன்.
தூய்மையை பேணிக் காப்பது என் அலுவலகக் கடமைகளில் ஒன்றாகும் என்பதை நான் நன்கறிவேன்.
மேலும், தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி தூய்மையை பேணிக் காக்க அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வேன் எனவும் உறுதி கூறுகிறேன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களை சுத்தம் செய்யும் நோக்கில், தேவையற்ற பொருட்கள் மற்றும் குப்பைகளைத் தரம் பிரித்துச் சேகரிக்கும் முன்னெடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், திட்ட அலுவலர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.கேசவதாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திருமதி பிரதௌஸ் பாத்திமா உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News