தேங்காய் பால் ஆரோக்கியமான கூந்தலுக்கு சிறந்தது.
தேங்காய் எண்ணெய் ,தேங்காய் பாலும் கூந்தலுக்கு சிறந்தது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.
இரண்டிலுமே லாரிக் அமிலம் காணப்படுகிறது. இது முடியின் வேர்க்கால்களுக்குள் ஊடுருவி ஈரப்பதத்தை கொடுக்கிறது. வறட்சியை தடுக்கிறது.
தேங்காய் பாலில் கரோட்டீன் புரதம் காணப்படுகிறது. இது முடியிழைகளை வலுவாக்கி முடி உடைவதை தடுக்கவும் உதவுகிறது.
தேங்காய் பாலை ஹேர் மாஸ்க், கண்டிஷனராகக் கூட பயன்படுத்தலாம். ஷாம்பு போட்ட பிறகு தேங்காய் பால் கலந்த தண்ணீர் கொண்டு கூந்தலை அலசலாம்.
பொடுகுத் தொல்லையை போக்குகிறது, பாதிக்கப்பட்ட கூந்தலை ரிப்பேர் செய்யும். அதிக வெப்பத்தால் முடி வறண்ட உடைவதை தடுக்கிறது.
தினமும் கூட அப்ளை செய்யலாம் அல்லது தலைக்கு குளிப்பதற்கு முன்பு அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து குளிக்கலாம்.
கூந்தலுக்கு ஈரப்பதத்தை அளித்து முடி வளர்ச்சியை தூண்டுகிறது,. உச்சந்தலை எரிச்சல் மற்றும் அரிப்பை போக்கி கூந்தலை பொலிவாக மாற்றுகிறது.
0
Leave a Reply