25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


செஸ் உலக கோப்பை வென்ற திவ்யாவிற்கு பாராட்டுக்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

செஸ் உலக கோப்பை வென்ற திவ்யாவிற்கு பாராட்டுக்கள்.

பெண்களுக்கான உலக கோப்பை செஸ் தொடர் ஜார்ஜியாவில்பைனலில் ஹம்பி, திவ்யா என இரண்டு இந்திய வீராங்கனைகளில் திவ்யா, செஸ் உலக கோப்பை வென்ற முதல் இந்திய வீராங்கனை என சாதனை படைத்தார். தவிர இருவரும் 2026ல் நடக்கவுள்ள 'கேண்டிடேட்ஸ்' தொடரில் பங்கேற்க தகுதி பெற்றனர்.

உலக கோப்பை தொடர் துவங்கும் முன் திவ்யா வலிமையான வீராங்கனை, இவர் வெற்றி பெறுவார் என யாரும் கணிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம், மன உறுதி திவ்யாவிடம் இருந்தது. 12 வயதில் குகேஷ் கிராண்ட்மாஸ்டர் ஆன போது, பெரிய வீரர் இல்லை. குகேஷிடம் வியத்தகு திறமை உள்ளது.

இதுபோன்று தான் திவ்யா. இந்தியாவின் முன்னணி வீராங்கனையாக இல்லை என்றாலும், அபூர்வ திறமை உள்ளது.ஆனந்த் போன்ற ஜாம்பவான்கள், புதிய தலைமுறை நட்சத்திரங்களை வழிநடத்திச் செல்வதால், இந்தியாவின் எதிர்காலம் சிறப்பாக உள்ளது. இந்திய செஸ் நட்சத்திரங்கள் உலக அரங்கில் வெற்றி பவனி வருகின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News