25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


அயோத்தி  ராமர் கோவிலில் மைசூரு சிற்பி வடித்த விக்ரகம் பிரதிஷ்டை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அயோத்தி  ராமர் கோவிலில் மைசூரு சிற்பி வடித்த விக்ரகம் பிரதிஷ்டை

 கர்நாடகாமாநிலம் மைசூருவை சேர்ந்த சிற்பக் கலைஞர் அருண் யோகிராஜ் வடித்த குழந்தை ராமர் விக்ரகம், அயோத்திராமர் கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொதுச்செயலர் சம்பத் ராய் தெரிவித்தார்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜன.22ல் நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுசெயலர் சம்பத் ராய் செய்தியாளர்களிடம்நேற்று கூறியதாவது:
கும்பாபிஷேகத்துக்கான சடங்குகள் இன்று முதல் துவங்கி ஜன.21 வரை நடக்கின்றன. கோயில்கருவறையில் பிரதிஷ்ட்டை செய்யப்பட உள்ள குழந்தை ராமர் விக்ரகம் ஜன.18ல் கருவறையில் வைக்கப்பட்ட து.கர்நாடகாவின் மைசூருவை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் வடித்த குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

இந்த சிலை 150 - 200 கிலோ எடை உடையது. கருவறைக்குள் வைக்கப்படும் விக்ரகத்திற்கான சடங்குகள் முடிந்து ஜன. 22 மதியம் 12:20 மணிக்கு ராமர் விக்ரகம் பிரதிஷ்டை செய்யும் சடங்கு துவங்கி1:00 மணிக்குநிறைவடையும்.தற்போது வழிபாட்டுக்காக கோயில் வளாகத்திற்குள் வைக்கப்பட்டுள்ளராமர் விக்ரகமும்,கருவறைக்குள் இடம் பெறும், என்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News