டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த தினம்.
இளைஞர்கள், மாணவர்களின் கனவு நாயகனாக திகழ்ந்த முன்னாள்ஜனாதிபதி, அணு விஞ்ஞானி அப்துல் கலாமின் பிறந்த தினமான அக். 15 உலக மாணவர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பொன்மொழிகள் .
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்!
உலகம் உன்னை அறிவதைவிட, உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்!
“ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலியாகின்றான். ஆனால். ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்று பெருமிதம் கொள்ளும் தருணத்தில் முட்டாள் ஆகின்றான்" .
."கரைகளைக் கடக்கும் துணிவிருந்தால்தான்
புதிய கடல்களை கண்டுபிடிக்க முடியும்.”
"கடின உழைப்பு, நேர்மைக்கு மாற்று எதுவும் இல்லை;
நிச்சயமாக எதுவும் இல்லை.”
மாணவர்களே இளைஞர்களே விடை பெறுகிறேன்..
நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வது உங்கள் கடமை.
0
Leave a Reply