ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கல்வி சுற்றுலா
ஒவ்வொரு வருடமும் எமது ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கல்வி சுற்றுலா நடைபெறும். தொல்லியல் துறை, சுற்றுலாத்துறை, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் மற்றும் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியின் முதுகலை மற்றும் வரலாற்று ஆய்வு மையம் இணைந்து நடத்திய மாநில அளவிலான தொல்லியல் கண்காட்சிக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் இதில் கலந்து கொண்டனர். வெம்பக்கோட்டை அகழாய்வு, விஜயகரிசல்குளத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட கி.மு, கி.பி யில் தொல்லியல் ஆராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண்ணால் செய்யப்பட்ட பொம்மைகள், பானைகள், முதுமக்கள் தாழிகள் மற்றும் பல்வேறு விதமான பொருட்களை மாணவர்கள் கண்டு வியந்தனர். மாணவர்கள் வரலாற்று புத்தகத்தில் கண்டவற்றை நேரிலே கண்டதும் மிகவும் உற்சாகம் அடைந்தனர். ராஜபாளையத்தை சுற்றியுள்ள இடங்களில் மற்றும் கிராமங்களில் கிடைத்த குகை ஓவியங்கள், பலியிடம், சிலைகள், குத்துக்கல் மற்றும் நடுகற்களின் புகைப்படங்களை கண்டு தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். மான் கொம்புகள், வேட்டையாட உபயோகித்த ஆயுதங்கள் மற்றும் ஓலைச்சுவடிகளை கண்டு வியந்து மகிழ்ந்தனர்.இந்த கண்காட்சியில் மாணவர்களோடு ஆசிரியர்களும், முதல்வரும், தாளாளரும் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply