25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் விவசாயிகள் பங்கு பெற்று பயனடையலாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் விவசாயிகள் பங்கு பெற்று பயனடையலாம்.

கிராம ஊராட்சிகளில் ஒட்டு மொத்த வேளாண் வளர்ச்சி பெற்று தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாற்றிடவும், தரிசு நிலங்களை விளைநிலங்களாக சாகுபடிக்கு கொண்டு வரவும் வேளாண்மை - உழவர் நலத்துறை மற்றும் உழவர் நலன் சார்ந்த பிற துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைத்திட கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் கடந்த 2021-22-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 நடப்பு 2025-26-ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் தரிசு நிலமுடைய 8 அல்லது அதற்கு மேற்பட்ட விவசாயிகள் குழுவாக ஒன்று சேர்ந்து குறைந்த பட்சம் 10  ஏக்கர் தரிசு நிலத்தை தொகுப்பாக ஏற்படுத்தி அத்தொகுப்பில் நீர் ஆதாரங்கள் மற்றும் நுண்ணீர் பாசனம் அமைத்து சாகுபடிக்கு கொண்டு வர இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 தரிசாக உள்ள தனிப்பட்ட விவசாயிகளின் நிலத்தில் இருக்கும் முட்புதர்களை அகற்றி நிலத்தினை சமன் செய்து உழுவதற்கு எக்டர் ஒன்றுக்கு 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.9600/- மானியம் வழங்கப்படுகிறது.

 வரப்புகளில் பயறு சாகுபடியை ஊக்குவிப்பதற்காக ஒரு எக்டருக்கு 5 கிலோ பயறு விதைகளுக்கு 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.300/- மானியம் வழங்கப்படுகிறது.

 நன்மை பயக்கும் நுண்ணுயிர்களை பெருக்கி மண்வளத்தினை மேம்படுத்துவதற்கான செயல் விளக்கத் திடல்கள் அமைத்திட எக்டர்  ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.450/- வரை மானியமாக வழங்கப்படுகிறது.

 விசைத்தெளிப்பான் அல்லது பேட்டரியால் இயங்கும் தெளிப்பான்கள் 50 சதவீதம்  மானியத்தில் அதிககட்சமாக ரூ.3000/- வரை மானியமாக வழங்கப்படுகிறது.

எனவே வேளாண் பெருமக்கள் நடப்பு 2025-26-ம் ஆண்டு கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் பங்கு பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தினை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News