25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


தேசிய வேளாண் வளர்ச்சி -திட்டத்தின் கீழ் மக்காச்சோளம் மற்றும் பருத்தி விதைகள் சாகுபடி செய்யும் விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேசிய வேளாண் வளர்ச்சி -திட்டத்தின் கீழ் மக்காச்சோளம் மற்றும் பருத்தி விதைகள் சாகுபடி செய்யும் விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

 தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், மக்காச்சோள சாகுபடிக்காக சிறப்பு திட்டமாக தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் - மக்காச்சோள சாகுபடி சிறப்பு திட்டம்(Special Project on maize cultivation)-ஆக அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மக்காச்சோள செயல்விளக்கத்திடல் விருதுநகர்மாவட்டத்திற்கு 5,500 எக்டேர் இலக்கு பெறப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் சிறுதானியசாகுபடியில் முக்கிய பயிராக மக்காச்சோளமே முதலிடத்தில் உள்ளது. அதனை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கான முக்கிய திட்டமான இதில் விதைகள் அங்கக உரங்கள் மற்றும் உயிர் உரங்கள் வழங்கப்படவுள்ளது. செயல்விளக்கத்திடல்கள் அமைத்து அனைத்து தொழில்நுட்பங்களையும் கடைபிடித்து உயர் மகசூல் பெற்றிடவும் அதன் விளைவாக மக்காச்சோளப்பயிர் சாகுபடி பரப்பினை அதிகரித்திடும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மேலும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், நெற்பயிரில் SRI/ இயந்திர நடவுக்காக எக்டருக்கு ரூ.6000 மானியம், பருத்தி விதைகள் கிலோவிற்கு ரூ.140 மானியம், பருத்தியில் நுனிக்கிள்ளுதலுக்கு எக்டருக்கு ரூ.1250 மானியம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. எனவே, விவசாயிகள் தங்கள்அருகிலுள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி அரசின் மானியங்களைப் பெற்றுபயனடைந்திடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,  அவர்கள் தெரிவித்துள்ளார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News