தேன்குழல் முறுக்கு
தேவையான பொருட்கள் -
2,1/2 கப் பதப்படுத்தின பச்சரிசி மாவு, 1/2 கப் வறுத்தரைத்த உளுத்தம் மாவு,1ஸ்பூன் சீரகம்,1ஸ்பூன்எள்ளு,பெருங்காயம், உப்பு,பொரிப்பதற்கு எண்ணெய்,1டேபிள்ஸ்பூன் வெண்ணை
செய்முறை -
பச்சரிசியை ஊறவைத்து திரித்து வாணலியில் வறுத்துவைக்கவும். (கோலம் போட்டால் இழை வருவது மாதிரி)
உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து மிக்ஸியில் நைசாக பொடி செய்து சலித்து வைத்துக் கொள்ளவும் .
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுத்தம் மாவு சேர்த்து கலந்து, எள்ளு, சீரகம், தேவையான உப்பு நன்கு கலந்துகொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் சூடு பண்ணி,கலந்து வைத்திருக்கும் மாவில் வெண்ணை, மற்றும் ஒரு ஸ்பூன் எண்ணைய் விட்டு, கிளறி தேவையான தண்ணி சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும். (சப்பாத்தி மாவு பதம்)
முறுக்கு ஒழக்கில் எண்ணெய் தடவி, தேன்குழல் அச்சு போட்டு எண்ணெயில் முறுக்கு பிழிந்து விட்டு, இரண்டு பக்கமும் திருப்பி போட்டு ஓசை அடங்கியதும் எண்ணெயில் இருந்து எடுத்து விடவும்.
வாயில் போட்டதும் கரை ந்து போகும் அளவுக்கு மொறு மொறு முறுக்கு சுவைக்க தயார் .குழைந்தைகளுக்கு பிடித்தமானது செய்து குடுத்து மகிழவும்..
0
Leave a Reply