25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


சீனாவில், ஆசிய பாட்மின்டன்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சீனாவில், ஆசிய பாட்மின்டன்

சீனாவில், ஆசிய பாட்மின்டன் (கலப்பு அணி) சாம்பியன்ஷிப் தொடரில், மொத்தம் 12 அணிகள், 4 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. 'டி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, மக்காவ் அணிகள் மோதின.

கலப்பு இரட்டையரில் இந்தியாவின் சதிஷ் குமார் கருணாகரன், ஆத்யா ஜோடி 21-10, 21-9 என மக்காவின் லியோங், வெங் சி ஜோடியை வீழ்த்தியது.

ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் லக்சயா சென் 21-16, 21-12 என மக்காவ் வீரர் பாங் போங் புய்யை வென்றார். பெண்கள் ஒற்றையரில் இந்தியா வின் மாளவிகா 21-15, 21-9 என மக்காவின் ஹாவோவை சானை தோற்கடித்தார்.

ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் அர்ஜுன், சிராக் ஷெட்டி ஜோடி 21-15, 21-9 என மக்காவின் புய் சி சோன், வோங் கோக் வெங் ஜோடியை வென் றது. பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் திரிசா, காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-10, 21-5 என மக்காவின் வெங்சி, புய் சிவா ஜோடியை வீழ்த்தியது.

முடிவில் இந்திய அணி 5–0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கான இடத்தை உறுதி செய்தது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News