25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விருதுநகர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் நலத்துறையில் மாணவ/மாணவியர்களுக்கென 47 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. தகுதியான மாணவ/மாணவியர்கள் விண்ணப்பங்களை பெற்று பயன்பெறலாம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் நலத்துறையில் மாணவ/மாணவியர்களுக்கென 47 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. தகுதியான மாணவ/மாணவியர்கள் விண்ணப்பங்களை பெற்று பயன்பெறலாம் .

தமிழ்நாடு அரசால் விருதுநகர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் நலத்துறையில்  மாணவ / மாணவியர்களுக்கென கீழ்கண்டவாறு மொத்தம் 47 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.பள்ளி விடுதிகளில் 24 மாணவர்களுக்கானது மற்றும் 18 மாணவியர்களுக்கானது. கல்லூரி விடுதிகளில் 3 மாணவர்களுக்கானது மற்றும் 2 மாணவியர்களுக்கானது என மொத்தம் 47 இடம் உள்ளது.

பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ / மாணவியர்களும் கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலு மாணவ / மாணவியர்களும் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர். பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் நல விடுதிகளில் அனைத்து வகுப்பைச் சேர்ந்த மாணவ / மாணவியர்களும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

 விடுதிகளில்  எவ்வித  செலவினமும்  இல்லாமல்  பின்வரும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

1. அனைத்து விடுதி  மாணவ / மாணவியருக்கு மூன்று வேலை உணவு மற்றும் தங்கும் வசதியும் அளிக்கப்படும்.

2.  10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியருக்கு  4 இணை சீருடைகள்  தைத்து   வழங்கப்படும்.

3.   10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் பொருட்டு   NEET/JEE    நுழைவுத் தேர்வுக்கான  வினாவங்கி நூல்கள், சிறப்பு வழிகாட்டிகள் மற்றும் வினாவங்கி நூல்கள்  வழங்கப்படும்.

4.   கல்லூரி விடுதிகளில் முதலாம் ஆண்டு தங்கிப பயிலும் மாணவ/மாணவியருக்கு  ஜமக்காளமும், பள்ளி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ/மாணவியருக்கு  ஆண்டுதோறும் பாய்களும் வழங்கப்படும்.

5.  பள்ளி/கல்லூா விடுதிகளில் தங்கிப்பயிலும் அனைத்து மாணவ/மாணவியர்களுக்கும்    இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை போர்வைகள் வழங்கப்படும்.

 விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள்: பெற்றோர் / பாதுகாவலரது  ஆண்டு  வருமானம்  ரூ.2,00,000/-க்கு  மிகாமல்  இருக்க  
          வேண்டும்.

1. இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின்  தொலைவு குறைந்தபட்சம்  8கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும்.  இந்த  தூர விதி  மாணவியருக்கு  பொருந்தாது.

தகுதியுடைய மாணவ / மாணவியர் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் / காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது  மாவட்ட ஆட்சித்தலைவர்  அலுவலகத்தில்  உள்ள  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்  மற்றும்  சிறுபான்மையினர்  நல அலுவலகத்திலிருந்தோ  இலவசமாக   பெற்றுக்  கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 18.06.2025-க்குள்ளும் கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதிகாப்பாளர் / காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் 15.07.2025-க்குள்ளும்  சமர்ப்பிக்க வேண்டும்.  மாணவ / மாணவியர்கள்  விண்ணப்பிக்கும்பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள்  ஏதும் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும்போது  மட்டும்  இச்சான்றிதழ்களை  அளித்தால்  போதுமானது.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ்  இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென  தனியே  5 இடங்கள்  ஏற்படுத்தப்பட்டுள்ளன.எனவே மாணவ/மாணவியர்கள் அரசின் இச்சலுகைகளை பெற்று, பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S, அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *