உலக துப்பாக்கி சுடுதலில் 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என, 9 பதக்கங்கள் கைப்பற்றிய இந்தியா 2வது இடத்துக்கு முன்னேறியது.
எகிப்தில், உலக துப் பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் ('ரைபிள்'/'பிஸ்டல்') தொடர் எகிப்தில், ஆண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் அசத்திய இந்தியாவின் சாம்ராட் ராணா (586.27 புள்ளி), வருண் தோமர்(586.26) முதலிரண்டு இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தனர்.
பைனலில் சாம்ராட், 243.7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை வென்றார் . மூன்றாவது இடம் பிடித்த வருண் (221.7) வெண்கலம் கைப்பற்றினார்.
10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் ஆண்கள் அணிகளுக்கான ,சாம்ராட், வருண், ஷர்வன் குமார் அடங்கிய இந்திய அணி 1754.69 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து, தங்கம் வென்றனர்.
25மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்' ஆண்களுக்கான பைனலில், அனிஷ், 28 புள்ளிகளு டன் 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.
10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் பெண்கள் அணிகளுக்கான ,ஈஷா சிங் (583.25), மனு பாகர் (580.20), சுருச்சி இந்தர் சிங் (577.17) அடங்கியஇந்திய அணி 1740.62 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றது.
0
Leave a Reply