இந்திய ஹாக்கி வீரர் ஹர் திக் சிங்'கேல் ரத்னா' விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
மத்திய அரசு சார்பில் 'கேல் ரத்னா', அர்ஜுனா உள்ளிட்ட விருதுகள் விளையாட்டு அரங்கில் சாதித்த இந்திய நட்சத்திரங்களுக்கு வழங்கி கவுரவிக்கப்படும். நடப்புஆண்டுக்கான விருதுக்கு தகுதியானவர்களை பரிந்துரை செய்யும் தேர்வுக்குழுகூட்டம் டில்லியில் நேற்று நடந்தது.
இந்திய ஹாக்கி அணியின் துணை கேப்டன் ஹர்திக் சிங் 27, மட்டும், நாட்டின் உயரிய 'கேல் ரத்னா' விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.
டோக்கியோ, ஒலிம்பிக்கில் பாரிஸ் வெண்கலம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்த இவர், இந்த ஆண்டு ஆசிய கோப்பை கைப்பற்றிய இந்திய அணியிலும் இடம் பெற்றிருந்தார்.
அர்ஜுனா விருதுக்கு ,யோகாசனம் வீராங்கனை ஆர்த்தி பால், செஸ் வீராங் கனை திவ்யா தேஷ்முக், ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங் கனை பிரனதி நாயக் உள்ளிட்ட 24 பேர் பரிந்துரைக்கப்பட்டனர்.
0
Leave a Reply