25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


பெங்களூருவில், மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய ஓபன் பாரா தடகளம்..
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெங்களூருவில், மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய ஓபன் பாரா தடகளம்..

மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய ஓபன் பாரா தடகளத்தின் 7வது சீசன் பெங்களூருவில், நடக்கிறது. ஆண்களுக்கான ஈட்டி எறிதல், 'எப் 12-எப்64' பிரிவு பைனலில் அதிகபட்சமாக 72.25 மீ., எறிந்த ஹரியானாவின் சுமித் அன்டில் தங்கம் வென்றார்.ஆண்களுக்கான ஈட்டி எறிதல் 'எப்40-எப்41' பிரிவு பைனலில் ஹரியானாவின் நவ்தீப் சிங் (42.63 மீ,), பிரின்ஸ் (31.90 மீ.,) முறையே தங்கம், வெள்ளி வென்றனர்.ஆண்களுக்கான ஈட்டி எறிதல், 'எப்46' பிரிவு பைனலில் ராஜஸ்தானின் சுந்தர் சிங் குஜ் ஜார் (64.53 மீ.,) தங்கப் பதக்கத்தை பற்றினார்.

 'டி35, டி37, டி42' பிரிவு பைனலில் பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில், உ.பி.,யின் பிரீத்தி பால் (15  வினாடி )முதலிடம் பிடித்து தங்கம்  வென்றார். அடுத்த இருஇடங்களை குஜராத்தின் பினா (17.20 வினாடி), ஹரியானாவின்  அவானி (20.40 வினாடி) கைப்பற்றினர்.பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் 'டி12, டி13' பிரிவு பைனலில் உ.பி.,யின் சிம்ரன் (12.30 வினாடி) தங்கம் வென்றார். 

' எப் 55, எப்56' பிரிவுஆண்களுக்கான வட்டு எறிதல் பைனலில் தமிழகத்தின் முத்துராஜா தங்கம் வென்றார். ஹரியானாவின் யோகேஷ் கதுனியா, ராமன் முறையே வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News