25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


உத்தரகாண்ட்டில் இந்தியாவின் 38வது தேசிய விளையாட்டு  போட்டிகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உத்தரகாண்ட்டில் இந்தியாவின் 38வது தேசிய விளையாட்டு  போட்டிகள்.

யோகாசனம் 

முதலில் காட்சி போட்டியாக சேர்க்கப்பட்டு இருந்த யோகாசனம், மல்லாகம்பிற்கு, பதக்கம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டன.

இதையடுத்து ஆண்களுக்கான யோகாசன போட்டி நடந்தன. இரட்டையர் பிரிவில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அணியின் தர்ம தேஜா, அபினேஷ் குமார் ஜோடி இரண்டாவது இடம் பிடித்து, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றியது.

பெண்கள் தனிநபர் பிரிவில் தமிழகத்தின் வைஷ்ணவி, மூன்றாவது இடம் பிடிக்க, வெண்கலப் பதக்கம் கிடைத்தது. 

படகுபோட்டி 

தமிழகத்தின் பகவதி, மதுமிதா, அகிலாண்டேஷ்வரி, ரோஸ்மஸ்டிகா படகு வலித்தல் போட்டியில் இடம் பெற்ற அணி, 2 கி.மீ., தூரத்தை 7 நிமிடம், 46.37 வினாடி நேரத்தில் கடந்து, வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. 

வில்வித்தை 

ஹரியானாவின் தீபாக்சிகா பெண்களுக்கான காம்பவுண்டு தனிநபர் வில்வித்தையில் தங்கம் கைப்பற்றினார். பஞ்சாப்பின் பர்னீத் கவுர், அவ்னீத் கவுருக்கு வெள்ளி, வெண்கலம் கிடைத்தன. ஆண்கள் பிரிவில் ராஜஸ்தானின் ரஜத் சவுகான் (தங் கம்), காஷ்மீரின் ஹிருதிக் சர்மா (வெள்ளி), ஆந்திரா வின் மணி ரத்னம் (வெண் கலம்) முதல் மூன்று இடம் பிடித்தனர்.

பீச் வாலிபால், 

பீச் வாலிபால் ஆண்களுக்கான போட்டியில் தமிழக அணி 2-1 என கோவாவை பைனலுக்கு வீழ்த்தி, முன்னேறியது. தமிழக பெண்கள் அணி 2-0 என புதுச்சேரியை வென்று, பைனலுக்கு  நுழைந்தது.  

 சைக்கிள்

தேசிய விளையாட்டு சைக்கிளில் அந்தமான், நிக்கோபார் தீவுகள் வீரர் டேவிட் பெக்காம் (10.691 வினாடி) தங்கப்பதக்கம் வென்றார். மணிப்பூர் வீரர் ரொனால்டோ (10.724), அந்தமான் வீரர் எசோ ஆல்பென் (10.826) அடுத்த இரு இடம் பெற்று, வெள்ளி, வெண்கலம் பெற்றனர்.டைம் டிரையர் தனிநபர் பிரிவில் தமிழக வீராங்கனை ஸ்ரீமதி, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News