25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


சர்வதேச, தமிழ்நாடு ஹாக்கி  போட்டிகள் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சர்வதேச, தமிழ்நாடு ஹாக்கி போட்டிகள் .

சர்வதேச ஹாக்கி   

புரோ லீக் 6வது சீசன் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஆண்கள் பிரிவில் 8 அணிகள் பங்கேற்கின்றன . இதற்காக பெல்ஜியம் சென்ற இந்திய அணி, தனது  கடைசி போட்டியில் பெல்ஜியத்தை மீண்டும் சந்தித்தது. இதில் இந்திய அணி 4-3 என  வெற்றி பெற்றது. 

 

பெண்கள் பிரிவில் மொத்தம் 9 அணிகள் பங்கேற்கின்றன. இதற்காக பெல்ஜியம் சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, தனது 14வது போட்டியில் பெல்ஜியத்தை மீண்டும் சந்தித்தது, இதில் இந்திய அணி, 2 வெற்றி, 3 'டிரா', 9 தோல்வி என 10 புள்ளிகளுடன் 9வது இடத்துக்கு தள்ளப்பட்டது 

 

தமிழ்நாடு ஹாக்கி 

முதலாவது தேசிய மாஸ்டர்ஸ் ஹாக்கி போட்டி ,தமிழ்நாடு ஹாக்கி சங்கம் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 

 

4-வது நாளான நேற்று நடந்த பெண்கள் பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழக அணி 1-2 என்ற கோல் கணக்கில் ஒடிசாவிடம் வீழ்ந்தது. மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அரியானாவை வீழ்த்தி 2-வது வெற்றி பெற்றது.  

 

5-1 என்ற கோல் கணக்கில் ஆண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் சண்டிகார் அணி மணிப்பூரை தோற்கடித்து 2வது வெற்றியை தனதாக்கியது.  ஆந்திராவை மற்றொரு ஆட்டத்தில் ,தமிழக அணி 11-0 என்ற கோல் கணக்கில், 2-வது வெற்றியை பெற்றது.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *