சர்க்கரை நோயாளிகள் குடிக்க வேண்டிய ஜூஸ்கள்
பாகற்காய் ஜூஸ்
நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த ஜூஸ் என்றால் அது பாகற்காய் ஜூஸ் தான். இது தினமும் எடுத்துக் கொள்ள முடியாமல் போனாலும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குடித்து வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய ஆரம்பிக்கும்
தக்காளி ஜூஸ்
இதை நீரிழிவு நோயாளிகள் தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக டைப் 2 நீரிழிவு உள்ளவர்கள் காலை நேரத்தில் தக்காளி ஜூஸை எடுத்துக் கொள்ளலாம். இதய நோய் ஆபத்துகள் அதிகம் இருக்கும் என்பதால் ரத்தம் உறைதலைத் தடுத்து ஆபத்தைக் குறைக்க தக்காளி ஜூஸ் உதவி செய்யும்.
சாத்துக்குடி ஜூஸ்
அதிக புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு உணவுகளுடன் சேர்த்து இந்த சாத்துக்குடி ஜூஸை எடுத்துக் கொள்ளலாம். வைட்டமின் சி, நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் அதிகம் உள்ளதால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.
கேரட் ஜூஸ்
கேரட்டில் வைட்டமின்கள். மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன. இதில் காம்பளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதால் இது வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுத்து அதிக கலோரிகள் எடுத்துக் கொள்ளாமல் தவிர்க்க உதவி செய்கிறது.
கிரீன் ஸ்மூத்தி
கீரைகள், இலைவடிவ காய்கறிகள் ஆகியவற்றை அப்படியே சாப்பிடுவதற்கு சிரமமாக இருந்தால் அதை ஜூஸாக்கி குடிக்கலாம்.இதில் ஸ்டார்ச்சும் கிடையாது. கிளைசெமிக் குறியீடும் மிகக் குறைவு என்பதால் டைப் 2 நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் தினமும் காலையில் எழுந்ததும் இந்த ஜூஸை குடிக்கலாம்.
மாதுளை ஜூஸ்- மாதுளை ஜூஸை நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம். இந்த மாதுளையில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே ஆகியவற்றோடு நுண்ணூட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. இதில் கிளைசெமிக் குறியீடு மிகக் குறைவு என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த மாதுளை ஜூஸ் மிகவும் நல்லது.
0
Leave a Reply