25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


கல்பாத்தி விஸ்வநாதர் கோவில்   பாதாள சிவன்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கல்பாத்தி விஸ்வநாதர் கோவில் பாதாள சிவன்

கேரள மாநிலம் பாலக்காடு கல்பாத்தியில் விஸ்வநாதர் கோயில் உள்ளது. இங்கு பாதாள சிவனாக மூலவர் இருப்பதால் 'குண்டுக்குள் கோயில்' என்கின்றனர். 'குண்டு' என்றால் 'பள்ளம்'.15ம் நுாற்றாண்டில் கல்பாத்தி புழைக்கரையில் லட்சுமியம்மாள் என்ற மூதாட்டி வாழ்ந்தார். இவரது குடும்பத்தினர் மயிலாடுதுறையைச் சேர்ந்தவர்கள். மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோயில் போல கல்பாத்தியில் கோயில் கட்ட மூதாட்டி விரும்பினார். அதற்காக காசியாத்திரை சென்று பாணலிங்கம் கொண்டு வந்தார். கோயில் கட்டுவதற்காக தன் சொத்துக்களை அரசுடைமையாக்கினார்.

மூதாட்டியின் கோரிக்கையை ஏற்ற மன்னர் இக் கோயில் கட்ட அனுமதித்தார். சுவாமிக்கு காசி விஸ்வநாதர் என்றும், அம்மனுக்கு விசாலாட்சி என்றும் பெயரிடப்பட்டது. அம்மன் தெற்கு நோக்கி இருப்பதால் எமபயம் போக்குகிறாள்.

தரைதளத்தில் இருந்து தாழ்வாக கட்டப்பட்ட கருங்கல் கோயில் இது. தெற்கு, கிழக்கு திசைகளில் 18 படிகள் கீழிறங்கிச் செல்லும் வகையில் உள்ளன. கோயிலுக்குள் இருந்தே ஆற்றுக்குச் செல்ல படித்துறைகள் உள்ளன.

மயிலாடுதுறையைப் போல இங்கும் ஐப்பசி தேர் திருவிழா நடக்கிறது. திருவிழாவில் விஸ்வநாதர் தேருடன் கல்பாத்தி லட்சுமி நாராயணர், சாத்தப்புரம் பிரசன்ன கணபதியும் தனித்தனி தேர்களில் எழுந்தருள்வர்.

கேரளக் கோயில்களில் இங்கு மட்டுமே நடராஜரின் கனகசபை உள்ளது. நவக்கிரகங்கள் தம்பதியராக காட்சி தருகின்றனர். திருமணத்தடை நீங்கவும், குழந்தை பேறு கிடைக்கவும் சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி அர்ச்சனை செய்கின்றனர். ஆயுள் விருத்திக்காக ருத்ராபிஷேகம், மிருத்யுஞ்ஜய ஜபம் செய்கின்றனர். முன்னோர் நினைவாக கல்பாத்தி நதிக்கரையில் தர்ப்பணம், சிராத்தம் செய்வது விசேஷம். இத்தலம் 'கேரள மயிலாடுதுறை' எனப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News