25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


கண்டந்திப்பிலி ரசம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கண்டந்திப்பிலி ரசம்

தேவையானவை: கண்டந்திப்பிலி - 100 கிராம், துவரம் பருப்பு, மிளகு, நெய் மற்றும் கடுகு - தலா ஒரு தேக்கரண்டி, காய்ந்த மிளகாய்-இரண்டு, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில்நெய் விட்டு, மிளகு, காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு மற்றும் ஒடித்த கண்டந்திப்பிலியைச் சேர்த்து வறுக்கவும். பின், மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து அடுப்பில் வைத்து, அரைத்த விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின்னர், கடுகு தாளித்துக் கொட்டி இறக்கவும்.

குறிப்பு: காய்ச்சல், உடல் வலி இருக்கும் சமயங்களில் இந்த ரசம் வைத்து, சூடான சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். வறுத்த மணத்தக்காளி வற்றல் அல்லது பருப்புத் துவையல் இதற்கு பொருத்தமாக இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News