கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை அன்று விளக்கேற்றும் முறை.
திருக்கார்த்திகையன்று காலையில் குளித்ததும், 7:30 மணிக்குள் குலதெய்வத்தை மனதில் நினைத்து பூஜை செய்ய வேண்டும். சிவனுக்கும், முருகனுக்கும் உரிய பாடல்களைப் பாட வேண்டும். அன்று மாலை வரை மனதிற்குள் அண்ணாமலைக்கு அரோகரா, நமசிவாய, சிவாயநம, சரவணபவ ஆகிய மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். மாலை ஆறு மணிக்கு விளக்கேற்ற வேண்டும். திரியை வெறும் கைகளால் தூண்டக் கூடாது. ஏதாவது தீக்குச்சி, பூவின் காம்பு ஆகியவற்றை பயன்படுத்தி தான் திரியை தூண்ட வேண்டும். அல்லது விளக்கு தூண்டு திரியை பயன்படுத்தி விளக்கை தூண்ட வேண்டும்.
திருக்கார்த்திகை அன்று விளக்கேற்றும் போது அகல் விளக்காக இருந்தாலும் வெறும் தரையில் வைக்கக் கூடாது. வாழை இலை, அரசு இலை,செம்பருத்தி இலை, வெற்றிலை என சுபிட்சத்தை தரும் ஏதாவது ஒரு இலை மீது வைத்து தான் ஏற்ற வேண்டும்.முதலில் வாசலில் கோலத்தின் மீது வைத்த விளக்கு,பிறகு நிலை வாசலில் வைத்த விளக்கை ஏற்ற வேண்டும். அங்கிருந்து ஒரு அகல் விளக்கை எடுத்து வந்து வீட்டின் பூஜைஅறையில் விளக்கேற்றி விட்டு, அதற்கு பிறகு தான் மற்ற இடங்களில் விளக்கேற்றவேண்டும்.
விளக்கை மலையேற்றும் போது, தூண்டு திரியை பயன்படுத்தி திரியை பின்னோக்கி இழுத்து விளக்கை மலையேற்றலாம். அல்லது பூவை பயன்படுத்தி தீபத்தின் சுடரை அழுத்தி, மலையேற்றலாம்.வாயால் ஊதியோ, கையை வைத்து விசிறியோ விளக்கை குளிர வைக்க கூடாது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என யார் வேண்டுமானாலும் தீபம் ஏற்றலாம்.
0
Leave a Reply