25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில்  இலக்கியக் கூட்டம் மற்றும்  பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் தமிழில் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் இலக்கியக் கூட்டம் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் தமிழில் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன

தமிழ் வளர்ச்சித்துறையின் 2021 - 2022 ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை அறிவிப்பின்போது, ” தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், ஆகியோரின் நினைவிடங்களில் அவர்களின் பிறந்தநாளன்று உள்ளுர் இலக்கிய அமைப்புகள் மூலம் ஆண்டுதோறும் கவியரங்கம், கருத்தரங்கம், இலக்கியக் கூட்டங்கள்  நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இவ்வறிவிப்பின்படி, 2024-25ஆம் ஆண்டில் திரு. மேலாண்மை பொன்னுசாமி,  தீபம் நா. பார்த்தசாரதி, திரு. கி. இராஜநாராயணன், திரு. கு. அழகிரிசாமி ஆகிய  இலக்கிய ஆளுமைகளின் இலக்கியப் பணி, தமிழ்த்தொண்டு, தமிழ்மொழிக்கான பங்களிப்பு ஆகியவற்றை நினைவுகூரும் வகையில்  விருதுநகர் மாவட்டத்தில் 13.02.2025 அன்று  விருதுநகர் இந்து நாடார் செந்திக்குமார நாடார் கலைக் கல்லூரியில் இலக்கியக் கூட்டம் நடத்தப்பெற உள்ளது.  முன்னதாக இவ்விலக்கிய ஆளுமைகள் குறித்து  06.02.2025 அன்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பெறவுள்ளன.  பள்ளிப் போட்டி காலையில் 09.30 மணி அளவிலும் , கல்லூரிப் போட்டி பிற்பகல் 2.00 மணி அளவிலும் விருதுநகர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் நடத்தப்பெறவுள்ளன.

போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள், தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியர் / கல்லூரி முதல்வரின் பரிந்துரைக் கடிதத்துடன் வரவேண்டும்.மாவட்ட அளவில் பள்ளி / கல்லூரிப் போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல்பரிசாக ரூ.5000/-, இரண்டாம்  பரிசாக ரூ.3000/-,  மூன்றாம் பரிசாக ரூ.2000/-, என்ற வகையில் வழங்கப்படும்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 13.02.2025 அன்று விருதுநகர் இந்து நாடார் செந்திக்குமார நாடார் கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ள இலக்கியக்கூட்டத்தில் பரிசு  மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S.,அவர்கள்  தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News