மீல்மேக்கர் குருமா
தேவையான பொருட்கள் : அரை கப் மீல்மேக்கர்,இரண்டு பட்டை,2 லவங்கம்,2 ஏலக்காய்,ஒருதேக்கரண்டிசோம்பு,1பெரியவெங்காயம்பொடியாகநறுக்கியது,1மேசைக்கரண்டிஇஞ்சிபூண்டுவிழுது,2தக்காளி,ஒருகைபிடிபுதினா,1கைப்பிடிமல்லித்தழை,ஒருதேக்கரண்டிமல்லித்தூள்,அரை தேக்கரண்டி மிளகாய்த்தூள்,அரை தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய்த்தூள்,அரை தேக்கரண்டி மஞ்சள் தூள்,தாளிக்க தேவையான அளவு
எண்ணெய்
அரைக்க தேவையான பொருட்கள் -ஒரு கப் துருவிய தேங்காய்,5,6 முந்திரிப்பருப்பு,அரை தேக்கரண்டி கசகசா
செய்முறை :
முதலில் மீல்மேக்ரை கொதித்த தண்ணீரில் போட்டு10 நிமிடம் மூடி வைக்கவும் .பின்னர் அதை எடுத்து நன்றாக பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு ,பட்டை, கிராம்பு, ஏலக்காய், பொடியாக நறுக்கிய வெங்காயம் ,போட்டு நன்றாக வதக்கவும் .நன்றாக வதக்கிய பின் இஞ்சி பூண்டு விழுது போடவும் .பொன்னிறம் ஆனவுடன் தக்காளி ,புதினா, மல்லித்தழை, போட்டு நன்றாக வதக்கவும்.பின்னர் மல்லி தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா போட்டு கிளறவும். பின்னர் மீல்மேக்கரைபோட்டு நன்றாக கிளறி கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். பின்னர் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 10 நிமிடம் கழித்து இறக்கி வைக்கவும். மீல்மேக்கர்குருமா தயார்.
0
Leave a Reply