25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விருதுநகர் மண்டலத்தில் 13 புதிய பேருந்துகளின் சேவைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு  அமைச்சர் பெருமக்கள் அவர்கள் துவக்கி வைத்தனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மண்டலத்தில் 13 புதிய பேருந்துகளின் சேவைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர் பெருமக்கள் அவர்கள் துவக்கி வைத்தனர்.

விருதுநகர்  பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விருதுநகர் மண்டலத்தில் புதியதாக பெறப்பட்ட 13 புதிய  பேருந்துகளின் சேவையினை  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள்,  சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன்  அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள்ஆகியோர்முன்னிலையில்,வருவாய்மற்றும்பேரிடர்மேலாண்மைத்துறைஅமைச்சர்திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும்  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர்  (23.03.2025) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு பேருந்துகளின் பராமரிப்பினை மேம்படுத்திடவும், பேருந்து வழித்தடங்களை மறுஆய்வு செய்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து சேவை மற்றும் வசதியினை மேம்படுத்திடவும், போக்குவரத்து கழகங்களுக்கு புதிய பேருந்துகளை ஒதுக்கீடு செய்யவும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், போக்குவரத்து  கழகங்களின் நிதி நிலை செயல்பாட்டு திறன்களை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை கோட்டத்தின் கீழ் மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் மண்டல அலுவலகங்கள் செயல்பட்டு நகர், புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகின்றது.

     விருதுநகர் மண்டலத்தில் 9 பணிமனைகளில் உள்ள மொத்தம் உள்ள பேருந்துகளின் எண்ணிக்கை 462 மற்றும் வறையறுக்கப்பட்ட சேவைகளின் எண்ணிக்கை 418 ஆகும். இக்கழகத்தில் உள்ள மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 2430 ஆகும். இக்கழகம் சாதாரணப் பேருந்து, விரைவுப்பேருந்து மற்றும் குளிர்சாதனப் பேருந்துகளை இயக்கி வருகின்றது. மேலும் நாளொன்றுக்கு நிர்ணிக்கப்பட்ட இயக்க தூரம் 1.95 லட்சம் கிலோ மீட்டர் ஆகும். இதனால் மாதத்திற்கு 58.50 இலட்சம் கிலோமீட்டர் இயக்கம் செய்ய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 2.01 இலட்சம் பயணிகளும், மாதம் ஒன்றுக்கு 60.30 இலட்சம் பயணிகளும் பயன்படும் வகையில் வழித்தட சேவைகள் இம்மண்டலம் மூலம் இயக்கப்பட்டு வருகிறது.

      தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 07.05.2021 அன்று மகளிருக்காக விடியல் பயணத்திட்டம் மூலம் நகரப்பேருந்துகளில் கட்டணமில்லா பயண சலுகை வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் விருதுநகர் மாவட்டத்தில்   தினந்தோறும் சுமார் 1.42 இலட்சம் பெண்கள் மற்றும் விருதுநகர் மண்டலம் முழுவதும் இதுவரை சுமார் 15.55 கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர். இதன் மூலம் மாதம் ஒன்றிற்கு மகளிருக்கு சுமார் 1000 ரூபாய் வரை சேமிப்பு ஏற்பட்டு பொருளாதாரம் மேம்படுகிறது. 1000 நபர்களுக்கு மேல் மக்கள் தொகையைக் கொண்ட அனைத்து கிராமங்களுக்கும் இக்கழகம் பேருந்து சேவையினை தொடர்ந்து செய்து வருகிறது.   தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக்கழகம் மதுரை கோட்டத்தின் கீழ் இயங்கி வரும் விருதுநகர் மண்டலத்திற்கு இதுவரை ரூ.42.43 கோடி மதிப்பில் 83 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. அதனைத்தொடர்ந்து இன்று ரூ.6.50 கோடி மதிப்பில் 13 புதிய பேருந்துகள் வழங்கப்பட்டு சேவைகள்  தொடங்கி வைக்கப் பட்டுள்ளன.

அதன்படி விருதுநகர்- காரியாபட்டி, விருதுநகர்- அருப்புக்கோட்டை, சாத்தூர்-கோட்டூர், அருப்புக்கோட்டை- நாகலாபுரம், அருப்புக்கோட்டை- இருக்கன்குடி, சிவகாசி- சாத்தூர், திருவில்லிபுத்தூர்- சிவகாசி, திருவில்லிபுத்தூர்- இலந்தைகுளம், ராஜபாளையம்- ஆலங்குளம் சிமெண்ட்ஸ், இராஜபாளையம்- இனாம்கோவில்பட்டி, காரியாபட்டி-விருதுநகர், காரியாபட்டி-நரிக்குடி, கான்சாபுரம்- வத்திராயிருப்பு- திருவில்லிபுத்தூர் ஆகிய 13 வழித்தடங்களுக்கு புதிய பேருந்துகளின் சேவைகள்  தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுதலின் படி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் விருதுநகர் மண்டலத்தில் இதுநாள் வரை இயக்கப்பட்டு வந்த 176 மகளிர் கட்டணமில்லா பேருந்துகளுடன் 46 நகரப்பேருந்துகள் கூடுதல் செய்து 01.04.2025 முதல் 222 மகளிர் கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக மதுரை கோட்ட மேலாண்மை இயக்குநர் திரு.ஆர் சிங்காரவேலு,
விருதுநகர் மண்டல பொது மேலாளர்  திரு.எஸ்.துரைச்சாமி, உதவி இயக்குநர் (செய்தி மக்கள் தொடர்புத்துறை) திரு.ச.தங்கவேல்,
 விருதுநகர் நகர்மன்ற தலைவர் திரு.மாதவன், உள்ளாட்சி பிரதிநிதிகள், போக்குவரத்துக்கழக அலுவலர்கள், பணியாளர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News