25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


மொராக்கோ ஜூனியர் உலக கால்பந்தில்  கோப்பை வென்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மொராக்கோ ஜூனியர் உலக கால்பந்தில்  கோப்பை வென்றது.

 மொராக்கோ அணி ஜூனியர் கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் ஆனது. பைனலில் 2-0 என, அர்ஜென்டினாவை வென்றது.

சிலியில், 20 வயதுக்கு உட்பட்டோருக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து 24வது சீசன்,.சான்டியாகோவில் நடந்த பைனலில் அர்ஜென்டினா, மொராக்கோ அணிகள் மோதின. ஆடிய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றது. .

மொராக்கோ சார்பில் முகமது யாசிர் ஜாபிரி 2 கோல் (12,29வது நிமிடம்) அடித்தார். கானா அணிக்கு பின் (2009) ஜூனியர் உலக சாம்பியன் பட்டம் வென்ற ஆப்ரிக்க அணியானது மொராக்கோ.

அர்ஜென்டினா (6 முறை), பிரேசில் (5)  அணிகள், இத் தொடரில் அதிக முறை கோப்பை வென்ற முதலிரண்டு இடத்தில் உள்ளன

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News