சத்து மாவு.
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு - ½ கிலோ, கம்பு - ½கிலோ, சம்பா கோதுமை - ½ கிலோ, பாசிப்பயறு -½ கிலோ, நிலக்கடலை - 1/4கிலோ, சிவப்பரிசி-¼ கிலோ, சோளம் -¼கிலோ, குதிரைவாலி - ¾ கிலோ, சாமை – 1/4கிலோ, வரகு – 1/4கிலோ, கொள்ளு – 1/4 கிலோ, கருப்பு உளுந்து -½ கிலோ, பொட்டுக்கடலை - ¼ கிலோ, சிவப்புக் கொண்டைக்கடலை - 100 கிராம், நாட்டுச் சோளம் - 100 கிராம், பாதாம் -100 கிராம்.
பிஸ்தா பருப்பு-100 கிராம், முந்திரி பருப்பு - 100. கிராம், சுக்கு - 50 கிராம், ஏலக்காய் - 10 கிராம்.
செய்முறை:
மேலே உள்ள பொருட்களை நன்கு சுத்தம் செய்து வெயிலில் காய வைத்துக் கொள்ளுங்கள். பின்பு ஒவ்வொன்றையும் தனித்தனியாக வறுத்து, அதன் பிறகு ஒன்றாகச் சேர்த்து மெஷினில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
உங்களுக்கு எப்போது தேவைப்படுகிறதோ அப்போது இந்த மாவினைச் சத்துமாவு உருண்டையாகவோ, கஞ்சியாகவோ, புட்டுப் போலவோ, மால்ட்டாகவோ, தோசையாகவோ, பேன் கேக்காகவோ வகை வகையாகத் தயாரித்து உட்கொள்ளலாம். குறிப்பாக,வளரும் குழந்தைகள், பெண்கள் மற்றும் பலவீனமான முதியோர்களுக்கு இந்தச் சத்துமாவு நல்ல ஊட்டச்சத்து நிறைந்த ஓர் அற்புத உணவு.
0
Leave a Reply