அருப்புக்கோட்டை ம.ரெட்டியபட்டியில்பதிவுத்துறை சார்பில் புதிய சார்பதிவாளர் அலுவலகத்தை ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ம.ரெட்டியபட்டியில் (16.02.2025) பதிவுத்துறை சார்பில் புதிய சார்பதிவாளர் அலுவலகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், பதிவுத்துறைத் தலைவர் திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்,I A S, அவர்கள் முன்னிலையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.
இந்த நாள் நம்முடைய திருச்சுழி தொகுதியினுடைய வரலாற்றில் குறிப்பாக நம்முடைய ம.ரெட்டியப்பட்டி பகுதியின் உடைய வரலாற்றில் மிக மிக முக்கியமான நாளாக நான் கருதுகிறேன்.கனவு மெய்ப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் ஒரு கனவு நினைவாகிறது என்கின்ற வகையில் ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக இந்த பகுதியின் கனவாக இருந்த இந்த சார் பதிவாளர் அலுவலகம் இன்று திறக்கப்பட்டுள்ளது.ஒரு நீண்ட பயணம் அது. இடைப்பட்ட காலத்தில் பல்வேறு நபர்களின் கோரிக்கையாக இருந்தாலும், நிர்வாக காரணங்களால் அது தள்ளிப் போய் கொண்டு இருந்தது.
உதவி தேவைப்படக்கூடிய காலத்தில் சரியான நேரத்தில் செய்யக்கூடிய அந்த உதவிதான் இந்த உலகத்தை காட்டிலும் பெரியதாக இருக்கும் என்று சொல்வதைப் போல, நம்முடைய பகுதி மக்கள் நன்மைக்காக ஒவ்வொரு முறையும் பந்தல்குடிக்கும், பெருநாழிக்கும், கமுதிக்கும் அழைந்து கொண்டிருக்கக்கூடிய அந்தக் கஷ்டத்திலிருந்து உங்களுக்கு அருகாமையிலேயே அதனை உருவாக்குவதற்கு நம்முடைய மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டு இந்த சார் பதிவாளர் அலுவலகத்தை உருவாக்கித் தந்திருக்கிறார்கள்.
இதனை சட்டமன்றத்தில் அறிவித்ததோடு தொடர் முயற்சியின் காரணமாக, இந்த கோப்பிற்கு பல்வேறு விதிவிலக்குகள் தேவை என்பதை எல்லாம் கருத்தில் கொண்டு, இந்த பகுதிக்கு தேவை என்பதை உணர்ந்து இன்றைக்கு அவற்றுக்கெல்லாம் விலக்குகளை அளித்து நமது நீண்ட கால கனவை நிறைவேற்றி இருக்கிறார்கள்.அரசுக்கு வணிகவரித் துறையின் மூலம் அதிகமான வருமானம் கிடைக்கின்றது. இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களிலும் வணிகவரிகளை, ஜிஎஸ்டி வசூலில் எல்லா மாநிலங்களை காட்டிலும் மிக அதிகமான அளவில், நம்முடைய மாநிலத்திற்கும் ஒன்றிய அரசுக்கும் வரி வருவாய் ஈட்டி தறக்கக்கூடிய பெருமை இந்த துறைக்கு உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த பதிவுத்துறை பெற்றிருக்கக் கூடிய வளர்ச்சி மிகப் பெரியது.
தமிழக அரசு தமிழ்நாடு முழுவதும் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு மிகப்பெரிய கட்டமைப்பு உருவாக்கி தருகிறது. தமிழ்நாட்டினுடைய பழைய கட்டிடங்களுக்கு எல்லாம் ஒரு புதுப்பொழிவை உருவாக்குகிறது. தொடர்ச்சியாக நம்முடைய பதிவுத்துறைகளில் இயங்கி கொண்டிருக்கக் கூடிய கட்டிடங்களுக்கெல்லாம் புதிய கட்டிடங்களை நவீன வசதிகளோடு செய்யப்பட்டு வருகிறது.நம்முடைய பகுதி வளர வேண்டிய பகுதி இன்னும் வளர்வதற்கும், இந்த பகுதியினுடைய பல்வேறு வளர்ச்சிக்கும், இப்பகுதியினுடைய மக்களின் நலத்திற்கும் இந்த பகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் என்றைக்கும் கடமைப்பட்டிருக்கின்றேன் என தெரிவித்தார்.
0
Leave a Reply