25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் பிரதான் இண்டஸ்இண்ட் வங்கி சார்பில், 200 அங்கன்வாடி மையங்களுக்கு எடை மற்றும் உயரம் அளவிடும் கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் பிரதான் இண்டஸ்இண்ட் வங்கி சார்பில், 200 அங்கன்வாடி மையங்களுக்கு எடை மற்றும் உயரம் அளவிடும் கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (21.04.2025) ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் பிரதான் இண்டஸ்இண்ட் வங்கி சார்பில், 200 அங்கன்வாடி மையங்களுக்கு எடை மற்றும் உயரம் அளவிடும் கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் வழங்கினார்.பின்னர், விவசாயப் பொருட்களின் விற்பனைக்காக 150 கிலோ வரை எடை பார்க்கும் 60 மின் தராசுகளை கண்மாய் விவசாய சங்கங்களுக்கு வழங்கினார்.

பிரதான் நிறுவனமானது  இன்டஸ்இண்ட் வங்கி  மாவட்ட வளர்ச்சித் திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்டத்தில் நரிக்குடி, சிவகாசி உள்ளிட்ட 7 ஒன்றியங்களில் நீர் நிலைகளை புணரமைத்தல், நில மேம்பாடு, இயற்கை விவசாயம், கல்வி, சுகாதாரம்  மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு ஆகிய திட்டங்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு துறையினருடன் இணைந்து செயல்படுத்தி வருகின்றது.

அதில் குறிப்பாக வளரிளம் பெண்கள் மத்தியில் அனீமியா ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்குத் தேவையான நடத்தை மற்றும் கல்வியினை மாவட்டத்தில் 3000 வளரிளம் பெண்களை குழுவாக ஒருங்கிணைத்து மாதம் ஒருமுறை அங்கன்வாடி மையங்களில் குழுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.அதன் ஒரு பகுதியாக, இன்று வளரிளம் பெண்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களின் எடை மற்றும் உயர அளவினை கணக்கிட 200 அங்கன்வாடி மையங்களுக்கு உயரம் மற்றும் எடை அளவிடும் கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.


இந்நிகழ்வில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் (பொ)  திருமதி பத்மாவதி, பிரதான் நிறுவன சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.கணேசன், திருமதி கனகவள்ளி மற்றும் திரு.ஆதிநாராயணன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News