தேங்காயை உடைத்தவுடன் கழுவி பின் பிரிட்ஜில் வைக்கவும்
தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.
தேங்காயை உடைத்தவுடன் கழுவி பின் பிரிட்ஜில் வைக்கவும். ஏனெனில் மேலெ ஏற்படும் பிசுபிசுப்பு இருக்காது.
இட்லி மாவில் ஆரம்பித்து பஜ்ஜி மாவு, வடை மாவு என அனைத்துமே கடைசி ஸ்பூன் வரை வீணாகக் கூடாது என்று நினைப்பவரா நீங்கள்? அவற்றை குழிவான அல்லது அடி வளைவான பாத்திரத்தில் வைத்து விட்டால் போதும். கடைசி கரண்டி வரை எளிதாக எடுத்து உபயோகிக்கலாம்.
பால் காய்ச்சிய பாத்திரத்தில் சப்பாத்தி மாவு பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும். எண்ணெய் சேர்க்க வேண்டிய அவசியமும் இல்லை! அதேபோல நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ரசம் செய்யலாம். அப்பளம் பொரித்த கடாயில் வற்றல் குழம்பையும் மோர் பாத்திரத்தில் தோசை மாவை வைக்கலாம்.
நீங்கள் காய்கறி பிரிஞ்சி, புலாவ் மற்றும் பிரைட் ரைஸ் போன்ற ஐட்டங்களை செய்யும் பொழுது கொஞ்சம் சோளத்தை வேக வைத்து சேர்த்தால் சாப்பாடு ருசியாக அமையும், மேலும் பார்ப்பதற்கு அட்டகாசமான நிறத்தில் சூப்பராக இருக்கும். ஆரோக்கியமும் அதிகரிக்கும்.
0
Leave a Reply