பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வானவர்கள்.
'தினமலர்' நாளிதழின் இணை நிர்வாக ஆகிரியர் டாக்டர் ஆர்.லட்சும்பதி. நடிகர் அஜித்குமார். சமையல் கலைஞர் தாமு, நடிகை ஷோபனா, கிரிக் கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்ட, 139 பேர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு பத்ம பூஷணும், 10 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு அரங்கில் இருந்து, இந்த ஆண்டு பத்ம பூஷண் விருதுக்கு ஸ்ரீஜேஷ் (ஹாக்கி), பத்ம ஸ்ரீ விருதுக்கு அஷ்வின் (கிரிக்கெட்), விஜயன் (கால்பந்து), ஹர்விந்தர் சிங் (பாரா வில்வித்தை), சத்யபால் சிங் (பாரா தட கள பயிற்சியாளர்) என 5 பேர் தேர்வாகினர்.
ஸ்ரீஜேஷ் கூறுகையில்,"மத்திய அரசு ஹாக்கி வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கிறது. இந்த ஆண்டு 'கேல் ரத்னா' விருதை ஹர்மன்பிரீத் சிங் பெற்றார். பலருக்கு பத்ம விருது அளிக்கப் படுகிறது. இதே போல ஹாக்கி ஜாம்பவான் தயான்சந்திற்கு 'பாரத ரத்னா' விருது (மறைவுக்கு பின்) வழங்க வேண்டும். இவர் தான் உலக விளையாட்டு வரைபடத்தில் இந்தியாவுக்கு முதல் அங்கீகாரம் பெற்றுத்தந்தவர்,"என்றார்.
பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வான இந்திய கால்பந்து ஜாம்பவான் விஜயன் (கேரளா) 55, கூறுகை யில், "நாட்டில் உள்ள ஒவ் வொரு கால்பந்து ரசிகருக்கும் விருதை அர்ப்பணிக்கிறேன்.என்றார்.
பத்ம விருதுக்கு தேர்வானவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
0
Leave a Reply