பிரதமர் மோடி ,உலக கோப்பை வென்ற இந்திய அணி வீராங்கனைகள் அவரது இல்லத்தில் சந்திப்பு.
நவி மும்பையில் நடந்த பைனலில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, பெண்கள் உலக கோப்பை தொடரில் முறையாக முதன் சாம்பியன் ஆகி புதிய வரலாறு படைத்தது.இந்திய அணி வீராங்கனைகள், தாஜ் ஓட்டலில் தங்கி, நேற்று மாலை பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
வீராங்கனைகள் அனைவரும் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) 'லோகோ' பொறித்த, 'நேவி புளு' நிறத்தினால் ஆன 'கோட்', 'சூட்' அணிந்தருந்தனர். உலக கோப்பை தொடரில் அரையிறுதி, பைனலில் பங்கேற்று, கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த துவக்க வீராங்கனை ஷைபாலி வர்மா, காலில் காயமடைந்த பிரதிகா, வீல் சேருடன் வந்திருந்தார்.
உலக கோப்பையை ஹர்மன் பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, மோடியிடம் வழங்கினர். மோடியை குறிக்கும் வகையில், 1ம் எண் கொண்ட, 'நமோ' என்ற பெயர் பொறித்த, நீல நிறஜெர்சியை வழங்கினர். இதில் இந்திய அணி வீராங்கனைகள் அனை வரும் கையெழுத்திட்டு இருந்தனர். வீராங்கனை களுக்கு பிரதமர் மோடி பாராட்டுதெரிவித்தார். தங்களது வெற்றி அனுப வங்களை வீராங்கனைகள் பகிர்ந்துகொண்டனர்.
0
Leave a Reply