25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இராஜபாளையம்  காந்திஜி நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு  திறந்து வைக்கப்பட்டது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இராஜபாளையம் காந்திஜி நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகராட்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.90 கோடி மதிப்பீட்டில், புதுப்பிக்கப்பட்ட காந்திஜி நூற்றாண்டு பேருந்து நிலையத்தினை  (29.05.2025) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து, புதுப்பிக்கப்பட்ட காந்திஜி நூற்றாண்டு பேருந்து நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ராணி ஸ்ரீ குமார் அவர்கள், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.தங்கப்பாண்டியன் அவர்கள், இராஜபாளையம் நகர்மன்ற தலைவர் திருமதி பவித்ரா ஷியாம் அவர்கள் மற்றும் சீர்மரபினர் வாரியத்துணைத் தலைவர் திரு.இராசா அருண்மொழி அவர்கள் ஆகியோர் முன்னிலையில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்.

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட  இராஜபாளையம்  காந்திஜி நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைக்கப்பட்டது.மேலும் இராஜபாளையத்தில் நிறைய நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றோம். நமது விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம் நகராட்சி பெரிய நகராட்சி ஆகும். இராஜபாளையம் பகுதியில், பாதாள சாக்கடை திட்டப்பணிகள், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், மருத்துவமனை கட்டடங்கள் மற்றும் நூலகம் உள்ளிட்ட அரசுத் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இராஜபாளையம் நகராட்சி பகுதியில் தென்காசி - மதுரை நெடுஞ்சாலையில் கடந்த 1969-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழைய பேருந்து நிலையத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு, புதியதாக பேருந்து நிலையம், கலைஞர் மேம்பாட்டு திட்டம் 2022-2023-ன் கீழ் ரூ.2.90கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கு அரசாணை வழங்கப்பட்டது.  அதனடிப்படையில் 1.41 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் பயனாளிகள் காத்திருப்பு அறை, 23 கடைகள், 2 உணவகங்கள், தாய்மார்கள் பாலுட்டும் அறை, பொருட்கள் வைப்பறை, நேர காப்பாளர் அறை, காவல் கட்டுப்பாட்டு அறை, ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை வசதி, பேருந்து நிறுத்த தளம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகளுடன் 926 ச.மீ பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு  பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது என  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *