25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >>


சேமியா பிரியாணி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சேமியா பிரியாணி

தேவையான பொருட்கள் -  ஆட்டுக்கறி 200 கிராம், சேமியா 200 கிராம், டால்டா 100 கிராம், தக்காளி 250 கிராம், பெரிய வெங்காயம் 3, பச்சை மிளகாய் 4, மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி, கொத்தமல்லித்தூள் 2, இஞ்சி 1 துண்டு, பூண்டு 10 பல், பட்டை கிராம்பு சிறிது, ஏலக்காய் 5, உப்பு தேவையான அளவு

செய்முறை  - முதலில் கறியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கழுவி வைக்கவும். இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஆகியவற்றை அம்மியில் விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளிப்பழம், ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் டால்டாவை ஊற்றி அடுப்பில் வைக்கவும். டால்டா காய்ந்ததும் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கிக் கொண்டு பின் தக்காளி துண்டுகளைப் போட்டு வதக்க வேண்டும்.

நன்றாக வதக்கி நறுக்கி வைத்துள்ள கறியைப் போட்டு கிளறி, அதனுடன் அரைத்த இஞ்சியை போட்டு கிளறி வதக்கவும். மிளகாய்த்தூள், கொத்தமல்லித் தூள், மஞ்சள்தூள், உப்பு இவைகளைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விட வேண்டும். கறி நன்றாக வெந்ததும் சேமியாவைப் போட்டு கிளறி மூடி வைக்கவும். சேமியா வெந்து,வற்றி வருகையில் இறக்கி வைக்க வேண்டும். இதுவே சேமியா பிரியாணி. இது சாப்பிட சுவையாக இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News