ஆசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் ஷ்ரேயாசிஜோஷி தங்கம் வென்ற முதல் இந்தியர்.
தென் கொரியாவில் 20வது ஆசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. முதல் நாளில் சீனியர் பெண்களுக்கான 'பிரீஸ்டைல் கிளாசிக்' ஸ்ல லோம் பிரிவில் போட்டி நடந்தது. இந்தியா சார்பில் ஷ்ரேயாசி ஜோஷி களமிறங்கினார்.தேசிய சாம்பியன்ஷிப்பில் 10 முறை கோப்பை வென்றதால், இவர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதற் கேற்ப சிறப்பாக செயல்பட்ட ஷ்ரேயாசி, அனைத்து பிரிவிலும் முதலிடம் பிடித்து, 83.33 புள்ளி எடுத்து தங்கம் கைப்பற்றினார்.
ஆண்களுக்கான சீனியர் 200 மீ., டியூவல் டைம் டிரையல் பிரிவில் இந்தியாவின் தனுஷ் பாபு, 17.592 புள்ளி எடுத்து வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீரர் ஆர்யன் பால் சிங் (17.731) 5-வது இடம் பிடித்தார்.
0
Leave a Reply