25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விருதுநகர் மாவட்டத்தில் 2024-25 கல்வியாண்டில் 12 ம் வகுப்பு தேர்வு எழுதி  கொண்டியிருக்கும் மாணவர்களுக்கான சிறப்பு ஆலோசனை உதவி மையம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்டத்தில் 2024-25 கல்வியாண்டில் 12 ம் வகுப்பு தேர்வு எழுதி கொண்டியிருக்கும் மாணவர்களுக்கான சிறப்பு ஆலோசனை உதவி மையம்

விருதுநகர் மாவட்டத்தில் 2024-25 கல்வியாண்டில் 12 ம் வகுப்பு தேர்வு எழுதி  கொண்டியிருக்கும் மாணவர்களுக்கான சிறப்பு ஆலோசனை உதவி மையம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படவுள்ளது.மாணவர்கள் தங்களது ஆர்வம் மற்றும் திறமைகளை பொருத்து, ஏற்கனவே உள்ள வாய்ப்புகள் மற்றும் படிப்புகள் குறித்த முழுமையான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம்.உயர்கல்வி சேர்க்கைக்கான இணையவழி மற்றும் நேர்முக விண்ணப்ப வழிமுறைகள் குறித்த விளக்கங்களும் பெற்று கொள்ளலாம்.

தேர்வு முடிவுகள், அது தொடர்பான பயம், தேர்வு முடிந்த பின் தொடரும் மன அழுத்தம் தொடர்பான உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படும். அரசுத்துறைகள் வழங்கும் கல்வி உதவித் திட்டங்கள், உதவித்தொகைகள் மற்றும் வங்கிகள் மூலம் வழங்கப்படும் கல்வி கடன் குறித்த விபரங்களும் பெறலாம்.இந்த சிறப்பு ஆலோசனை மையமானது 12 ஆம் வகுப்பு தேர்வு முடிந்த 26.03.2025 அன்று முதல் செயல்படும். இந்த ஆலோசனை மையத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல், உளவியல் சார்ந்த வழிகாட்டல் ஆகியவை பெற்று பயன் பெறலாம்.

மேலும், விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் கல்வி அறக்கட்டளை மூலம் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, உயர்கல்விக்கு தேவையான அனைத்து ஆலோசனைகள் மற்றும் உயர்கல்வி பயில்வதற்கான உதவிகளும் வழங்கப்படும். எனவே மாணவர்கள் சிறப்பு ஆலோசனை மையத்தின் மூலம் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News