அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் இராஜபாளையம் மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம் .
மாசி மாதம் 09ம் தேதி முதல் மாசி மாதம் 18ம் தேதி வரை (21.02.2026 02.03.2026)
இராஜபாளையம் நகரில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்னர் எனது தந்தையாரின் தாத்தா ஸ்ரீ பி.ஏ. சின்னையராஜா அவர்களால் மணல் மேட்டில் கேட்ட மணி சப்தத்தைக் கொண்டு தோண்டி எடுக்கும் போது கிடைத்த திருக்கோவிலாகும். புராதனமும், பாரம்பரியமும் மிக்க இத்திருக்கோவிலை எனது தாத்தா பெருந்தகை ஸ்ரீ பி.ஏ.சி. ராமசாமிராஜா அவர்கள் எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த தெய்வ பொக்கிஷமாகக் கருதி பரம்பரை அறங்காவலராக இருந்து பல திருப்பணிகள் செய்து மகிழ்ந்தார்கள். அவரைத் தொடர்ந்து எனது தகப்பனார் "குருபக்தமணி" ஸ்ரீ பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா அவர்கள் 1977,2001 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் இராஜகோபுரமும், கொடிமரமும், அருள்மிகு ஐயப்பன் திருகோவிலும் ஸ்தாபித்து ஸ்வாமீ, அம்பாளுக்கு தங்ககவசமும் நூதன வசந்த மண்டபம் போன்ற பல்வேறு திருப்பணிகள் செய்து மூன்று முறை கும்பாபிஷேகம் செய்து மகிழ்ந்தார்கள்.
மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம் ,இத்திருக்கோவிலில் சிறப்பாக நடைபெற உள்ளது. ஆஸ்திக மஹாஜனங்கள் அனைவரும் இத்திருவிழாவில் கலந்து கொண்டு ஸ்ரீ மீனாக்ஷி ஸமேத சுந்தரேச்வரர் திருவருளுக்கு பாத்திரர்களாகும்படி கேட்டுக்கொள்கிறோம்.
0
Leave a Reply