விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்கான சுப முகூர்த்த நேரம்..
விநாயகர் சதுர்த்தி வழிபாடு ஆகஸ்ட் 26ம் தேதியா? ஆகஸ்ட் 27ம் தேதியா?
தேய்பிறை சதுர்த்தியான சங்கடஹர சதர்த்தி வழிபாடு மட்டுமே சந்திர உதய்த்தை அடிப்படையாக வைத்து வழிபட வேண்டியதாகும். வளர்பிறை சதுர்த்தி வழிபாடு என்பது சதுர்த்தி திதியை அடிப்படையாக வைத்து செய்யப்படும் வழிபாடு ஆகும். அதனால் ஆகஸ்ட் 27ம் தேதி தான் சூரிய உதய நேரத்தில் சதுர்த்தி உள்ளது.
ஆகஸ்ட் 26ம் தேதி பிற்பகலுக்கு பிறகே சதுர்த்தி திதி துவங்குகிறது. இதனால் ஆகஸ்ட் 27ம் தேதியை தான் விநாயகர் சதுர்த்தியாக கணக்கில் எடுத்துக் கொண்டு வழிபட வேண்டும்.
ஆகஸ்ட் 27ம் தேதி காலை 11 மணி முதல் பகல் 01.40 வரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டினைசெய்யலாம். இதுவே விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்கான சுபமுகூர்த்தநேரமாக குறிப்பிடப்படுகிறது.
0
Leave a Reply