மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், தமிழ்நாடு முழுவதும் 34,073 சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 4,42,949 மகளிருக்கு 3,190.10 கோடி ரூபாய் வங்கிக்கடன் இணைப்புகள் வழங்குவதை தொடங்கி வைக்கும் விதமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் செயல்படும் 3,584 சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த மகளிருக்கு 366.26 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகளை காணொலி காட்சி வாயிலாக இன்று (08.03.2025) வழங்கினார்.
அதனை தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரகஃ நகர்புர வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த 10,569 நபர்களுக்கு ரூ.87.37 கோடி கடனுதவி மற்றும் இணை மானியத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், நிதி,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார்.
மேலும் விருதுநகர் மாவட்டத்தில், ஊரக பகுதியை சார்ந்த 703 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.62.41 கோடி மதிப்பிலான வங்கி நேரடி கடன், மற்றும் நகர்புற பகுதியை சார்ந்த 128 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.20.50 கோடி மதிப்பிலான வங்கி நேரடி கடன், இதர மகளிர் நலத் திட்டங்களின் கீழ் 410 நபர்களுக்கு 2.30 கோடியும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 186 நபர்களுக்கு 2.16 கோடியும் ஆக மொத்தம் 10569 நபர்களுக்கு 87.37 கோடி கடனுதவி மற்றும் இணை மானியம் வழங்கப்பட்டது.பெண் பெற்றதால் பெருமை பெற்றோம் என்று சொன்னவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். இந்த உலகில் இயற்கை நமக்கு அளித்து இருக்கக்கூடிய மிகப்பெரிய கொடை பெண்கள் தான் என்று சொன்னால் அது நிச்சயமான உயர்வு உணர்ச்சி அல்ல. இயற்கை நமக்கு வழங்கியிருக்க கூடிய இந்த கொடைதான் இந்த பூமி பந்தினுடைய சுழற்சியை, இயக்கத்தை நம்முடைய தலைவர்களை என்றென்றும் காக்கக் கூடியவர்களாக தொடர்ந்து பெண்கள் இருக்கிறார்கள்.
அந்தப் பெண்களின் சக்தி, அண்டம் துவங்கிய காலத்திலிருந்து இன்று இருக்கக்கூடிய காலம் பார்த்தால் எங்கெங்கு காணினும் சக்தியானாய் என்று கவிஞர்கள் பாடினார்கள் என்று சொன்னால் உங்கள் சக்தி எல்லா இடங்களிலும் யாவித்து பரவி இருக்கிறது.
அப்படி யாவித்து பரவி இருக்கக்கூடிய அந்த பெண் சக்தி ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, அவர்கள் தங்களுடைய சக்தியை இந்த சமுதாயத்தின் பல்வேறு காரணங்களால் அவர்கள் இழக்க நேரிட்ட போது, தந்தை பெரியார் போன்ற சமுதாய தலைவர்கள் உருவாகி பெண்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுத்தார்கள்.வடக்கே ஒரு ராஜா செம்முன்றாய் தோன்றினார் என்று சொன்னால், இங்கே தந்தை பெரியார் வந்தார். அவர்தான் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பினர். பெண் ஏன் அடிமையானால் என்கின்ற என்ற அவர் எழுப்பிய கேள்விக்கு விடை தான் இன்று பெண்கள் அடிமை இல்லை, அவர்கள் எல்லா துறையிலும் சாதிக்க பிறந்தவர்களாக இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையை வழங்கினார் என்பதற்கு பெரியார் காட்டிய வழி அவர்கள் எழுப்பிய கேள்வி இன்றைக்கு உங்களை உயர்த்தி இருக்கிறது.
தமிழ்நாடு பெண் கல்விகளில் சிறந்து இருக்கிறது. இந்திய அளவில் மகளிர் சுய உதவி குழுக்களின் மூலமாக நிதி உதவிகளை பெற்று பெண்கள் தொழில் முனைவராக இருக்கக்கூடிய மாநிலம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு தான் என்ற பெருமை பெற்றிருக்கிறது. அந்த பெருமையை நீங்கள் தமிழ்நாட்டுக்கு பெற்று தந்து இருக்கிறீர்கள் என்று சொன்னால், உங்கள் மீது அரசும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நம்பி இந்த அரசாங்கம் இருக்கிறது உங்கள் மீது அரசும் முதலமைச்சரும் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை என்று உரைக்க சொன்னார் அவர்கள் உங்களுக்கு அறிவித்திருக்க கூடிய அத்தனை திட்டங்களும் மகளிர் உரிமைகளை காப்பதற்கு, உங்களுடைய நலனை பெறுவதற்கு, இந்த சமுதாயத்தில் நீங்கள் தலைநிமிர்ந்து நிற்பதற்கு காரணமான ஆட்சி நம்முடைய முதலமைச்சர் அவர்கள் என்றென்றும் உறுதுணையாக இருப்பார்கள்.
எனவே இந்த மகளிர் தின நாளில் நாங்கள் உங்களுக்கு வாய்ப்புகள் வழங்குவதற்காக அல்ல உங்களுடைய பணிகளில் உங்களுடைய சிறப்புகளில் உங்களுடைய உயர்வுகளில் உங்களோடு என் இணைந்திருக்க கூடியவர்களாக நாங்களும் உங்களோடு உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்று சொல்லி அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துக்களை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
0
Leave a Reply