அண்டை மாவட்டங்களில் உள்ள பெண் தொழில்முனைவோர் நிறுவனங்களுக்கு அடிப்படை மற்றும் மேம்பட்ட இணக்க சேவைகளை வழங்குவதற்காக மதுரையில் Compliance Mela-வினை TN-RISE ஏற்பாடு செய்துள்ளது.
வேளாண் உணவு வர்த்தகமையம், அலங்காநல்லூரில் வருகின்ற 07.02.2025 அன்று முகாம் நடைபெற உள்ளது. என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I.A.S.., அவர்கள் தகவல்.
TN-RISE மகளிர் புத்தொழில் கவுன்சில், மாநிலத்தின் கிராமப்புறங்களில் உள்ள பெண்களிடையே தொழில்முனைவை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடுஅரசால் நிறுவப்பட்டது. இது தமிழ்நாடு முழுவதும் பெண்கள் தலைமையிலான/சொந்தமாக உள்ள நிறுவனங்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட சந்தைஇணைப்புகள், நிதி மற்றும் செயல்பாட்டு ஆலோசனைகளை வழங்குகிறது.
பெண் தொழில்முனைவோர் மத்தியில் தங்களின் தொழிலுக்குத்தேவையான இணக்கப்பதிவுகள் மற்றும் சான்றிதழ்கள் இல்லாதது அவர்களின் தொழிலின் முன்னேற்றத்திற்கும்விரிவாக்கத்திற்கும் ஒருபெரும் தடையாகவுள்ளது.இதுகுறித்து, மதுரை மாவட்டம் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் உள்ள பெண் தொழில்முனைவோர் நிறுவனங்களுக்கு அடிப்படை மற்றும் மேம்பட்ட இணக்க சேவைகளை வழங்குவதற்காக மதுரையில் Compliance Mela-வினைTN-RISE ஏற்பாடு செய்துள்ளது.
கீழ்க்கண்ட சேவைகள் அங்கு வழங்கப்படுகின்றன :
● PAN
● TAN
●உதயம் (UDYAM)
● FSSAI
● GST
●வர்த்தக முத்திரை (Trade Mark)
●காப்புரிமை தாக்கல் (Patent Filing)
● DPIIT பதிவு (DPIIT Registration)
●நிறுவனப்பதிவு (Company Registration)
●இறக்குமதி ஏற்றுமதி சான்றிதழ் பதிவு (Import Export Certificate Registration)
●ஆயுஷ் சான்றிதழ் பதிவு (AYUSH Certificate Registration)
● NPOP சான்றிதழ் விண்ணப்பம் (NPOP Certificate Application)
●இன்குபேஷன்டிரைவ் (Incubation Drive)
●கடன் வசதி இணைப்பு (Credit Facilitation)
●பேக்கேஜிங் மற்றும் லேபிளிங் உதவி (Packaging and Labeling Drive)
மேற்காண் சேவைகளின் மூலம் பெண் தொழில்முனைவோர் தங்கள் நிறுவனங்களை முறையான இணக்கங்களுடன் முறைப்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நிகழ்ச்சி நடைபெறும் இடம் மற்றும் விவரங்கள் கீழ்க்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன:
வேளாண் உணவு வர்த்தகமையம், அலங்காநல்லூரில் பிரதானசாலை மதுரையில் வருகின்ற 07.02.2025 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை நடைபெறுகிறது.
தொடர்புக்கு: 1) கார்த்திகேயன் (EDO)- 9994142115
2) மாரிகணேஷ் (EFO)- 9514737043 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்
0
Leave a Reply